புதிய கொரோனா வைரஸால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் – பிரித்தானியா எச்சரிக்கை

52
145 Views

பிரித்தானியாவில்  கண்டுபிடிக்கப்பட்ட   புதிய வகை கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என  தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸின் புதிய திரிபு மற்றும் பழைய திரிபுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை பகுப்பாய்வு செய்து கணிதவியலாளர்கள், இந்தத் தரவுகளை திரட்டியுள்ளனர்.

வேகமாக பரவக் கூடிய கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஏற்கனவே பிரிதானியா முழுக்க பரவியுள்ளதோடு ஏனைய நாடுகளிலும் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here