Tamil News
Home செய்திகள் இலங்கை கடற்படை மூழ்கடித்த படகிலிருந்த இந்திய மீனவர் இருவரின் சடலங்கள் மீட்பு

இலங்கை கடற்படை மூழ்கடித்த படகிலிருந்த இந்திய மீனவர் இருவரின் சடலங்கள் மீட்பு

நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகு மூழ்கி மாயமான நான்கு மீனவர்களில் இருவரது உடல் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நால்வரும் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் நெடுந்தீவுக்கு கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர் இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்ப முயன்ற போது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மீது மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதனால் படகில் இருந்த நால்வரும் நடுக்கடலில் மாயமானார் மாயமான மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக இலங்கை கடற்படையினர் நெடூந்தீவு கடற்கரை பகுதியில் தேடி வந்த நிலையில் தற்போது இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

எஞ்சிய இரண்டு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மீட்கப்பட்ட இரண்டு உடல்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு எடுத்து வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வர உள்ளனர்.

உடற்கூறு ஆய்வின்போது குறிப்பிட்ட இந்த இரண்டு மீனவர்கள் யார் என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version