Tamil News
Home செய்திகள் நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் அவை முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இப் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் தமிழர் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனவழிப்பு சிங்கள பேரினவாத அரசு இடித்துடைத்ததை கண்டித்து மாணவ சமூகம், மக்கள் அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர். நொடிப்பொழுதில் தாயக உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இளையோர்கள் சமூக வலைத்தளங்களில் தாயக நிலைமையை வெளிக்கொண்டுவந்தார்கள்.

அந்தவகையில் இன்று ஐக்கிய நாடுகள் அவை தமிழ் மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாதைகளை தாங்கிய வண்ணம் சிங்கள பேரினவாத அரசை கண்டிக்கும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்களால் கோசங்கள் எழுப்பப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமது முழுமையான ஆதரவை தாயகத்தில் போராடும் மாணவ சமூகத்திற்கு வழங்கும் உணர்வோடு தமது கடும் குளிரையும் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Exit mobile version