Tamil News
Home உலகச் செய்திகள் ‘மீண்டு பிறந்தது போல் இருக்கிறது’: விடுதலை குறித்து அகதியின் கருத்து

‘மீண்டு பிறந்தது போல் இருக்கிறது’: விடுதலை குறித்து அகதியின் கருத்து

“என்னால் இதை நம்பவே முடியவில்லை. மீண்டும் பிறந்தது போல் இருக்கிறது. நான் இப்பொழுது சுதந்திர மனிதன். என்னை காவல் காக்க இனி காவலாளிகளும் கிடையாது,” என அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் குர்து அகதியான Farhad Bandesh.
2013ம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த இவர் மனுஸ்தீவு சிறையில் 6 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர் ஜூலை 2019யில் முதல் சுமார் 1 ஆண்டுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்தாத் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மனுஸ் – நவுறுவிலிருந்து வந்து அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்ட அகதிகளில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியா கொண்டுவரப்பட்டு இடைத் தங்கல் முகாம்களில் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் இருநூறு அகதிகளில் முதல்முறையாக இருவர் விசா வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளதாக ABC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருவர் கடந்த திங்கட் கிழமை பிறிஸ்பன் கங்காரு ஹோட்டலில் இருந்தும் இன்னொருவர் கடந்த புதன்கிழமை மாலை மெல்பேர்ன் குடிவரவு திணைக்கள இடைத்தங்கல் முகாமிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Exit mobile version