Tamil News
Home செய்திகள் பொறுப்பிலிருந்து விடுபடுதல் தலைமைத்துவப் பண்பல்ல – கோட்டாவை தாக்கும் பொன்சேகா

பொறுப்பிலிருந்து விடுபடுதல் தலைமைத்துவப் பண்பல்ல – கோட்டாவை தாக்கும் பொன்சேகா

“பொறுப்பில் இருந்து விடுபட்டுத் தப்பிக்க நினைப்பவர் உண்மையான தலைவன் கிடையாது” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது சொற்கணை தொடுத்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.

இது தொடர்பில் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் சரத் பொன்சேகா பதிவொன்றை இட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு;

“கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியாமல், அதன் பொறுப்பை ஏனையோர் மீது சுமத்திவிட்டு, தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கு முற்படுவது தலைமைத்துவப் பண்பு கிடையாது.

கொரோனா சமூகத்தொற்று அபாயத்தை நாடு எதிர்கொண்டுள்ளநிலையில் அந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை மீட்பதற்காக அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்ட வேண்டிய தருணத்தில், பொறுப்பில் இருந்து விடுபடும் விதத்தில் அறிவிப்புகளை விடுப்பது அர்ப்பணிப்புடன் செயற்படும் படையினர் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் மன உறுதியில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.

இற்றைக்கு ஒரு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது, பாதுகாப்புச் செயலாளருக்குரிய பணியை செய்வதற்கு அல்ல” என்றுள்ளது.

Exit mobile version