Home உலகச் செய்திகள்  நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ள சுமார் 3 கோடி பெண்கள்-மேலும் பல முக்கிய செய்திகள்

 நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ள சுமார் 3 கோடி பெண்கள்-மேலும் பல முக்கிய செய்திகள்

உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘Stacked Odds’ என்ற புதிய அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமான பெண்கள் நவீன அடிமைத்தன சூழலுக்குள் சிக்கியுள்ளனர்  என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.

121097942 1178707089168364 2884711334181915407 o.jpg? nc cat=110& nc sid=730e14& nc ohc=P MXZ3K cGcAX kfRuz& nc ht=scontent maa2 1  நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ள சுமார் 3 கோடி பெண்கள்-மேலும் பல முக்கிய செய்திகள்

ரோஹிங்கியா அகதிகளுக்கு மொழிக் கல்வி

மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளிடையே கல்வி அறிவைப் போதிக்கும் விதமாக, அகதிகளுக்கு ஆங்கிலம் மற்றூம் பஹாசா(Bahasa) மொழிகளைக் கற்றுத்தரும் முயற்சிகளை WOMEN for Refugees எனும் தொண்டு அமைப்பு மேற்கொண்டுள்ளது.

இந்த முயற்சியை மலேசியாவின் Selangor மாநிலத்தின் Selayang பகுதியில் மேற்கொண்டுள்ளது. தற்போதைய சுமார் 20 மாணவர்களுக்கு 9 ஆசிரியர்கள் மொழி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

பாலியல் தொழிலாளர்களுக்கும் சாதாரணமான தொழிலாளர்களின் சலுகைகள்  வழங்க வலியுறுத்தல்

பாலியல் தொழிலாளர்களை `முறைசாரா தொழிலாளர்கள்’ என்று அங்கீகரிக்கவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவுப்பொருட்களை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை அவர்களுக்கு வழங்கவும் வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) ஆலோசனை வழங்கியுள்ளது.

சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளில் கோவிட்-19  நோய்த்தொற்றின் தாக்கத்தை ஆய்வு செய்த மனித உரிமைகள் ஆணையம், பாலியல் தொழிலாளர்களை முறைசாரா தொழிலாளர்களாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் மூலம் அவர்களுக்கு பிற சாதாரண `தொழிலாளர்களுக்கான சலுகைகள் கிடைக்கும்’ என்று அந்த ஆணையம் கருதுகிறது.

99ம் ஆண்டுக்கு முன் பயன்படுத்திய மருந்து கொரோனா நோயாளர்களை காப்பாற்றுமா?

99ம்ஆண்டுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்ட காசநோய்த் தடுப்பு மருந்து அல்லது பி.சி.ஜி என்றழைக்கப்படும் தடுப்பு மருந்தை கொண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற ஆய்வை பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

காசநோயைத் தடுப்பதற்காக 1921இல் கண்டுபிடிக்கப்பட்ட  இந்தத் தடுப்பு மருந்து, மற்ற நோய்த்தொற்று பாதிப்புகளிலிருந்தும் மனிதர்களை பாதுகாக்கக் கூடியது என்பதற்கான சான்றுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடுப்பு மருந்தை கொண்டு பிரிட்டனின் எக்ஸிடெர் பல்கலைக்கழகம் நடத்தவுள்ள பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

Exit mobile version