Tamil News
Home செய்திகள் பெருமளவில் போதைப்பொருட்களை கடத்திய காவல்துறை அதிகாரிகள்?

பெருமளவில் போதைப்பொருட்களை கடத்திய காவல்துறை அதிகாரிகள்?

போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பதாக சிறீலங்காவில் கைது செய்யப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 2009ம் ஆண்டுக்குப் பின்னானக் காலப்பகுதியில் தமிழர் பிரதேசங்களில் இலங்கை அரசால் திட்டமிட்டுப் போதைப்பொருள் பயன்பாடுகள் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. இந்த சம்பவங்கள் தொடர்பாக வடக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கடற்படையினர் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்தில், போதைப் பொருள் கடத்தலை தப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வந்தது, அதன் தொடர்ச்சியாக தூக்குத் தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. இதனால் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வழி ஏற்பட்டது.

தற்போது போதை பொருள் தடுப்பு காவல்துறை அதிகாரிகளே, அக்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது போதைப் பொருள் கடத்தலை தடுப்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதும் தெரிய வருகின்றது.

2009ம் ஆண்டு இலங்கையில் முடிவுற்ற உள்நாட்டுப் போரில், அரசிற்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் செயல்பட்டதால் மக்களிடையே சரிந்திருந்த காவல்துறையின் மீதான மதிப்பை அரசாங்கம் மீட்டு வரும் வேளையில், இந்த சம்பவம் மேலும் தலைகுணிவையையே ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு காவல் அதிகாரிகள் கடல் வழியாக போதைப்பொருளைக் கடத்தி வந்து பாதுகாப்பான இடங்களில் பதுக்கி வைத்து போலியான தேடுதல் வேட்டைகள் நடத்தி சிறிது போதைப்பொருளை மட்டும் கைப்பற்றியதாக அரசிற்கு போலிக்கணக்குகளைக் காட்டி பல மில்லியன் மதிப்புள்ள பணத்தை சம்பாதித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சுமார் 24 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதால் அவருக்கு எதிராகப்  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் காவல்துறை வரலாற்றில் இவ்வளவு பெரிய சம்பவம்,நடந்திருப்பது இது தான் முதல் முறை என சிறீலங்கா  அமைச்சர் அலி சப்ரியின் (According to Justice Minister Ali Sabry) கருத்துப்படி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் மூலம் காவல்துறையினர் தனது நன் மதிப்பை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறீலங்கா, இந்தியாவின் தென் முணையில் அமைந்துள்ளதால் போதைப்பொருளை ஓர் இடத்தில் இருந்து கடத்தி வந்து பல நாடுகளுக்கு அனுப்பும் இடமாக சிறீலங்கா உள்ளதாகவும் இதனால் சிறீலங்காவில் பலர் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறினார்.

சுமார் 5,53000 பேர் அதாவது சுமார் மொத்த மக்கள் தொகையில் 2.5% பேர் போதைக்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிவித்தார். நாட்டின் சிறைகளில் உள்ள 30,000ம் சிறைக்கைதிகள் அல்லது மொத்த கைதிகளில் 60% பேர் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கிற்காக சிறையில் உள்ளனர்.

2015 ம் ஆண்டு 6,600 ஆக போதைப்பொருள் சம்மந்தப்பட்ட வழக்குகள் கடந்த வருடம் 16,000தை கடந்துள்ளது. ஆகவே முக்கியமான இந்த சூழலில், போதைப்பொருள்களை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

காவல்துறையினர் கூறும் பொழுது, கடந்த மே 15ம் திகதி வெல்லிசரா என்ற கிராமத்தில் இருந்து 225 கிலோ போதைப்பொருளை சிறப்பு போதைப்பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையினர் கைப்பற்றியதே இந்த காவல் அதிகாரிகள் சிக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதனுடன் தொடர்புடைய வர்த்தகரை கைது செய்த போது அவர் கொடுத்த தகவலின் உதவியாலையே  குறித்த காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கொழும்பில் உள்ள நீதி மன்றம் ஒன்று, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள உதாரா சம்பத்திற்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், அரை மில்லியனுக்கும் மேல் மதிப்புள்ள நிலங்கள், வாகனங்கள், மற்றும் நகைகள் 30 மில்லியன் சிறீலங்கா ரூபாயை புதைத்து வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த அதிகாரிகளுக்கு மேல் கூறப்பட்ட குற்றக்கங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கூறுவோம் என காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version