Tamil News
Home செய்திகள் திருடப்படும் தமிழீழ கனிம வளங்கள்

திருடப்படும் தமிழீழ கனிம வளங்கள்

மன்னார் தீவுப் பகுதிகளில் உள்ள 204 சதுர கி.மீ பரப்பளவில் அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்று சிறீலங்கா அரசின் ஆதரவுடன் தமிழீழ மண்ணின் கனிம வஙங்களை அபகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்த்திரேலியாவின் கனிமவள அகழ்வு நிறுவனம் (Australian mineral exploration company) 2015 ஆம் ஆண்டில் இருந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளது. 265 மெற்றிக் தொன் அளவுடைய கனிமவளங்களை அகழ்வதே தமது திட்டம் எனவும், அகழ்வதற்கு உரிய அனுமதிப்பத்திரங்களை கொண்டிருந்த மொரிசியஸ் நாட்டு இரு நிறுவனங்களை வாங்கிய பின்னரே தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இல்மனைற், றுற்ரைல், சேர்கோன் மற்றும் கார்னற் வகையான அரியவகை தாதுப்பொருட்களை இந்த நிறுவனம் அகழ்ந்தெடுத்து வருகின்றது.

இதனிடையே, மன்னாரில் உள்ள கனிம வழங்களை அகழ்வதற்குரிய அனுமதிப்பத்திரங்களை ஐந்து நிறுவனங்களும், தனி நபரும் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனிமவழங்களை அகழ்வு செய்யும் நிறுவனங்கள் அது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிப்பதில்லை என சிறீலங்காவின் பூகோள ஆய்வு மற்றும் கனிமவள திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, போரின் பின்னர் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் திட்டமிட்ட இனஅழிப்பின் ஒரு பகுதியாகவே இந்த கனிமவள திருட்டையும் தமிழ் பிரதேசங்களில் அனுமதித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version