Home செய்திகள் தப்புத் தாளங்கள்: மாட்டிக் கொண்ட சிறீலங்கா

தப்புத் தாளங்கள்: மாட்டிக் கொண்ட சிறீலங்கா

கோவிட்-19 உருவாக்கியுள்ள பெரும் சவால்களை எதிர்கொள்ள அரசுகளும் அதன் தலைவர்களும் தமது தேவைக்கேற்றவாறு பலமுனை பரப்புரைகளை முன்னெடுத்து தமது மக்களை ஏய்க்கும் பல பணிகளை திரைமறைவில் முன்னெடுத்து வருகின்றன. அதில் சிறீலங்கா தலைமைகளுக்கும் எவ்வித விதிவிலக்கும் இல்லை. இதைத் தான் அவர்கள் எப்போதும் செய்கின்றனரே என்கிறீர்களா! சமீபத்தில் ஒரு கணணி வலையத்தில் வந்த செய்தி ஒன்று சிறீலங்காவில் மேற்கோள் காட்டப்பட்டு அறிவார்ந்த சமூகம் மத்தியில் பேசப்பட்டது.

ஆனால் அதன் பின்புலத்தைத் தேடினால் வெளிநாட்டில் இருந்து வெளியாகும் நம்பிக்கையான சிறந்த இணையவெளி போன்ற மாயயையில் மறுபுறத்தில் சமீபத்தில் பதிவுசெய்யப்பட்டு ஆரம்பிக்கபட்டு சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் பின்னணியில் வெளியான தகவல்களே அவை. இது குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறு மேலும் ஒரு பதிவு மேற்கோள் காட்டப்பட்டு கோவிட்-19 விடயத்தில் சிறப்பாக தொழிற்படும் நாடு என சிறீலங்கா உலகில் 9ஆவது இடத்தில் போட்ப்பட்டு அதற்காக கொழும்புத் தலமைகள் அதிகம் புகழப்பட்டு ஒரு செய்தி சிறீலங்காவிற்குள் பகிரப்பட்டிருந்துது. அது குறித்து தேடிய போது மீண்டும் இவ்வாறு காத்திரமில்லாத அதேவேளை உத்தியோகப்பற்றற்ற நம்பத்தன்மை குறைந்த தரவுகளும் பதிவுகளுமே ஆதாரமாக கிடைத்தன. அதுவும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தனிநபரின் ஆய்வே அதன் அடித்தளம். அது கூட அது குறித்த பகிர்வில் தெரிவிக்கப்படவில்லை.

அவ்வாறாயின் ஏன் இந்த முயற்சி? இதற்கு பின்னால் ஏதோ ஒரு விடயம் பாதகமாக இருக்கிறது அதனால் அதை முன்கூட்டியே மூடி மறைக்க இந்த முயற்சி என்பது புலனானது. இன்று 17ஆம் நாள் வெள்ளிக்கிழமை கூட முன்னைய கதைக்கு வலுச்சேதர்க்கும் வகையில் மேலும் சோடிப்புகளுடன் அதேவேளை அவுஸ்திரேலிய விடயத்தை குறிப்பிட்டு ஒரு விரிவான கதையை கொழும்பின் டெய்லி மிறர் இன்றும் வெளியிட்டுள்ளது விந்தை தான். அக்கதையின் சில பகுதிகள் வருமாறு (SL performs well in fighting Coronavirus & ranked 9 in GRID Index. Sri Lanka and its leadership were ranked 9th in the Global Response to Infectious Diseases (GRID) Index which evaluates how efficient and effective the leadership of the country and the preparedness of its health system were in tackling COVID-19 pandemic.)

சரி விடயத்திற்கு வருவோம். சிறீலங்கா ஏதை மூடிமறைக்க முனைகிறது எனத் தேடிய போது கிடைத்த புதையலே இது. டீப் நொலோஜ் குரூப் கோவிட்-19 என்ற ஆய்வுக்குழு உலகின் உத்தியோகபபூர்வ தகவல் மையங்களின் கோவிட்-19 குறித்த தரவுகளை தொகுத்து ஆய்விற்கு உட்படுத்தி அதுவும் 70 விடயதானங்களிலான தரவுகளையும் தகவல்களையும் கருத்தில் கொண்டு தனது கோவிட்-19 குறித்து ஆய்வுத்தகவல்களை 150 நாடுகளை கவனத்தில் கொண்டு வெளியிட்டு வருகின்றது. இவை குறித்து உலகில் மிகவும் மதிக்கப்படும் ஊடக வலையமைப்பான பிரசித்தி வாய்ந்த போப்ஸ் (Forbes) வெளியிட்ட கட்டுரையும் தகவல்களுமே என் கண்ணில் முதலில் பட்டன. அதன் அடிப்படையில் உலக ரீதியாவும் வட்டார ரீதியாகவும் அது கோவிட்;-19 குறித்த பல விடயங்களிலான நாடுகளின் நிலைகளை தரவரிசைப் பட்டியலாக அது வெளியிட்டு காலத்திற்கு காலம் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் அதில் மாற்றங்களையும் செய்து வெளியிட்டு வருகிறது.

covid 19 Sri தப்புத் தாளங்கள்: மாட்டிக் கொண்ட சிறீலங்காஅதில் சிறீலங்கா குறித்த முக்கிய விடயத்திற்கு வருவோம். உலகில் கோவிட்-19 வியடத்தில் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளாக 20 நாடுகள் அடையாளம் காணப்பட்டு அதிலுமான தரவரிசையில் அவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அப்பட்டியல் வருமாறு. 1. இத்தாலி 2. அமெரிக்கா 3. இங்கிலாந்து 4. ஸ்பெயின் 5. பிரான்ஸ் 6. சுவீடன் 7. ஈரான் 8. ஈகுவடோர் 9. பிலிப்பைன்ஸ் 10. ரூமேனியா 11. நைஜீரியா 12. ரஸ்சியா 13. பங்களாதேஸ் 14. மெக்சிக்கோ 15. இந்தியா 16. சிறீலங்கா 17. இந்தோனேசியா 18. மயன்மார் 19. கம்போடியா 20 லாவோஸ்

அதாவது கோவிட் விடயத்தில் அதிக ஆபத்தான நாடதாக சிறீலங்கா அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை மூடி மறைக்க முன்கூட்டியே சிறீலங்கா கதைபின்ன ஆரம்பித்துள்ளமை இங்கு புலனாகிறது. மேற்க்கண்ட பட்டியலை ஆழமாக தொடர்ந்தும் நோக்கி ஆய்விற்கு உட்படுத்தி வரும் எவருக்கும் இப்பட்டியல் எவ்வளவு தூரம் உண்மையை வெளிப்படுத்துகிறது என்பது புரியும். இதிலும் பட்டியலில் முன்வரிசையில் உள்ள நாடுகள் ஆபத்தான நிலையை பட்டவார்தனமான தற்போதே வெளிப்படுத்துகின்றன. பட்டியலில் கீழே உள்ள நாடுகள் அத்திசையில் பயணிக்கின்றன ஆனால் வெளிப்படையாக அந்நிலையை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பதுவும் புலனாகும். இப்பட்டியலில் இணைந்து வேகமாக முன்னகரும் நிலையில் தற்போது பிரேசில் உண்டு.

சரி இப்போது சொல்லுங்கள் கண்ணால் காண்பதுவும் காதால் கேட்பதுவும் எல்லாம் உண்மையா? அல்லது எப்போதும் தீரவிசாரித்து அறிவதே மெய்யா?

நன்றி: நேரு குணரட்னம்

Exit mobile version