Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடும் அமெரிக்கா – தென்கொரியாவிடம் உதவி கேட்டது

கொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடும் அமெரிக்கா – தென்கொரியாவிடம் உதவி கேட்டது

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 136 பேர் மரணமடைந்துள்ளதுடன், இதுவரையில் 53,000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்னர்.

இந்த நிலையில் தனக்கு உதவுமாறு அமெரிக்கா தென்கொரியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள தென்கொரியா, கோவிட்-19 வைரஸ் பரிசோதனை உபகரணங்கள், சுயபாதுகாப்பு அங்கிகள் உட்பட பெருமளவான பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்ப் இந்த கோரிக்கையை நேற்று விடுத்ததாகவும், எனவே தாம் உடனடியாக பொருட்களை அனுப்பியுள்ளதாகவும் தொன்கொரிய அதிபர் மூன் ஜேனின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version