கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.

கல்வி அபிவிருத்தி என்பது கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் வளங்கள் மீது முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கல்வியை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்வதாகும்.அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்கள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமமான வளப்பகிர்வு மற்றும் சரியான திட்டமிடல் மூலம் கல்வியை -அபிவிருத்திக்கு மூலதனமாகப் பயன்படுத்துகின்றன.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் சரியான கல்வியில் திட்டமிடலின்மை, வளப்பங்கீட்டில் சமத்துவமின்மை காரணமாக பொருளாதார ரீதியில் பின்னடைவாகக் காணப்படுகின்றன.இலங்கையில் கல்வி அபிவிருத்தியிலும் பிராந்திய ரீதியில் சமத்துவமின்மை காணப்படுகின்றது.ஒரு நாட்டில் முழுமையான கல்விஅபிவிருத்தி ஏற்படவேண்டுமாயின் பிரதேச ரீதியில் கல்வி அபிவிருத்தி அடையவேண்டும்.இலங்கை கல்வி அபிவிருத்தியில் பின் நிற்பதற்கு இதுவே காரணமாகும்.SAM 65981 கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.

கல்வி அபிவிருத்தியிலும் பிராந்திய ரீதியில்சமத்துவமின்மையில் செல்வாக்குச் செலுத்தும் பிராதன காரணிகள் .
1.மக்கள் காரணிகள் 2.கல்வியியல் காரணிகள்
3.அரசியல் காரணிகள் 4.புவியியல் காரணிகள்

மக்கள் காரணிகள்
09 மாகாணங்களிலும் சனத்தொகை எண்ணிக்கையில் மாறுபாடு காணப்படுவது போல பாடசாலைகளின் எண்ணிக்கையிலும் கல்வி வலயங்களின் எண்ணிக்கையிலும் மாறுபாடு காணப்படுகின்றது.

உதாரணம்
வட மாகாணம் 971 பாடசாலைகள்- 5 மாவட்டம்

மேல் மாகாணம் 1360 பாடசாலைகள்- 3 மாவட்டம்
உயர்ந்த சிறந்த பாடசாலைகளின் பரம்பல் மேல்மாகாணத்திலும் ஏனைய சில மாகாணங்களில் நகரப்புறங்களிலும் காணப்படுகின்றமை

உதாரணம்

மேல் மாகாணத்தில் 1971பாடசாலைகள் காணப்படுகின்றமையும்
சர்வதேசப்பாடசாலைகள் (international schools)அதிகம் காணப்படுகின்றமையும்

பொதுவாக மாணவர் ஆசிரியர் விகிதம் 24:01 ஆக காணப்படுகின்ற வேளை இது நகர்ப்புற பாடசாலைகளில் 18:01 ஆகவும் மலையக கிராமாப்புற பாடசாலைகளில் 50:01 ஆகவும் காணப்படுகின்றது

கல்வியியல் காரணிகள்

• அரச மற்றும் அரச சார்பற்ற கல்வி வாய்ப்புக்கள் மேல் மாகாணத்தில் அதிகம் காணப்படுகின்றன.

• இலங்கையில் காணப்படுகின்ற 15 அரச பல்கலைக்கழகங்களில் 06 பல்கலைக்கழகங்கள் மேல் மாகாணத்திலே காணப்படுகின்றன.

• கொழும்பு பல்கலைக்கழகம்

• மோறட்டுவ பல்கலைக்கழகம்

• களனிப்பல்கலைக் கழகம்

• ஜெயவர்த்தனபுர பல்கiலைக்கழகம்

• கட்புல ஆற்றுகை பல்கலைக்கழகம்

• நாவல திறந்த பல்கலைக்கழகம்

• மேலும் கிழக்கு வடக்கு மாகாணங்களில் பல்கலைக்கழகம் காணப்படுகின்ற போதும் முக்கிய சில பீடங்கள் காணப்படுவதில்லை

உதாரணம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

• கிழக்குப்பல்லைக்கழகம் போன்றபல்கலைக்கழகங்களுக்கு பொறியியல் பீடம் வழங்கப்படாமை

• மேல் மாகாணத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகம் வாழ்வதாலும் பொருளாதாரமத்தியநிலையமாகவும் காணப்படுவதாலும் கல்விக்கான வாய்ப்புக்கள் கல்விநிறுவனங்கள் அதிகம் குவிக்கப்பட்டுக் காணப்படல்.

உதாரணம்

• இலங்கை சட்டக்கல்லூரி

• ஜோன்கொத்தலாவ பாதுகாப்புபல்கலைக்கழகம்

• தகவல் தொழிநுட்ப தனியார் பல்கலைக்கழகம்

• NSBM GREEN UNIVERSITY

• இலங்கை உயர்தொழிநுட்ப கல்வி நிறுவனம்

• NATIONAL INSTITUTE OF BUSINESS MANAGEMENT

• BUDDHIST AND PALI UNIVERSITY OF SRILANKA

• INSTITUTE OF ENGINEERING TECHNOLOGY

• CINEC MARTIME CAMPUS

• பொறியியல் உயர் தேசிய டிப்ளோமா (Technical university)

• விண்வெளி ஆய்வுக்கழகம்

போன்றவை மேல் மாகாணங்களிலே காணப்படுகின்றமை.இதனால் கிராம தோட்டப்புற மாணவர்கள் இவ்வாய்ப்புக்களை நுகரமுடியாமல் உள்ளது.
• தேசிய கல்வி நிறுவகம் அதிக கல்வி வாய்ப்புக்களை கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளுக்கு வழங்குதல் கல்வி அமைச்சகம் இலங்கை பரீட்சை அலுவலகம் கொழும்பில் காணப்படுகின்றமை.
• பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழு போன்றவை கொழும்பில் காணப்படுகின்றமை.

இவ்வாறு தரமான கல்வி வாய்ப்புக்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு இருப்பதால் ஏனைய பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு இது எட்டக்கனியாகவும் காணப்படுகின்றது.

இவ்வாறு கல்வியியல் ரீதியில் வளங்கள் பிராந்திய ரீதியில் சமமின்மையாகக் காணப்படுகின்றது

அரசியல் காரணிகள்

• இலங்கையில் காலத்திற்கு காலம் மாறிவரும் ஆட்சி மாற்றத்திற்கேற்ப கல்விக் கொள்கைகளும் மாறி வருகின்றமை கல்வி அபிருத்தியைப் பாதிக்கின்றது

• அத்துடன் பெரும்பான்மையினரே நாட்டின் தலைமை பதவியைப் பெறுவதால் கல்வி அபிவிருத்திதிட்டங்கள் பெரும்பான்மையினருக்கும் அவர்கள் வாழும் பகுதிகளுக்கும் பெரும் பகுதி கிடைக்கப்பெறல்

• பாதீட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும் தமிழ் முஸ்லிம் பாடசாலைகளுக்கு குறைவான நிதிகளே கிடைக்கின்றன.

• வளப்பகிர்வில் சமத்துவமின்மைgwschoolrenovation 2a கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.

• கல்வி அமைச்சராகக வருபவர் தங்கள் மாவட்டத்தில் மாத்திரம் அதிக கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்தல

• அரசியல்வாதிகள் தங்கள் பிரதேசத்தில் மாத்திரம் முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்புக்களை வழங்குதல்.

உயர் தொழினுப்ப வகுப்பறை (Smart class room)கொழும்பு ஜயவர்த்தனபுர மகா வித்தியாலயம் பதுளை விசாகா கல்லூரி போன்ற நகரப்புற பாடசாலைகளில் காணப்படுகின்ற அதேவேளை மலையகப் பாடசாலைகள் பல இடிந்து விழும் வகுப்பறைகளுடன் காணப்படுகின்றன.

• யுத்தத்திற் முன் இடை நிலைக்கல்வியில் அதாவது க.பொ.த சதாரண தரத்தில் முதன் நிலையில் காணப்பட்ட வடக்கு மாகாணம் இன்று 09 நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கும் மறைமுக அரசியல் காரணிகளே காரணமாகும்

• ஆசிரியர் நியமனங்களில் முறையற்ற அரசியல் தலையீடு

• திறமையான ஆசிரியர்களை அரசியல் வாதிகள் தங்கள் பகுதிகளுக்குள் நியமனம் செய்தலும்

• முறையற்ற ஆசிரியர் இடமாற்றம்

• போதிய கட்டிட தளபாட நூலக தொழிநுட்ப வசதிகளை பெற்றுக்கொடுத்தலும்

• மலையக தகமையற்ற ஆசிரியர் நியமனம்

புவியியல் காரணிகள்

• நாட்டில் உயர தாழ்வு வேறுபாடுகள் புவியியல் அமைப்பு போன்றவையும் கல்வி அபிவிருத்தியில் பங்கெடுக்கின்றன.

• இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகும் பாடசாலைகள்

• மலையக பாடசாலைகள் கரையோர மலையக பிள்ளைகளுக்கு எந்தளவு தூரம் கல்வி சென்றடைகின்றது என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

• மலையக முன்பள்ளிகளின் அதிகாரம் தேயிலைத்தோட்ட நிர்வாகத்தினரிடம் காணப்படல்

• நகர மயமாக்கல் காரணமாக நகரத்தை நோக்கிய இடப்பெயர்வினால் கரையோரப் பாடசாலைகள் மூடப்பட்டும் அபாயம்

• கூடுதல் தூரம் 10km ஒரு பாடசாலை அமைய வேண்டும் ஆனால் பெருந்தோட்டப் பகுதியில் இது சாத்ததியமின்மை

இலங்கை கல்வி அபிவிருத்தியிலும் பிராந்திய ரீதியில் சமத்துவமின்மைபக்கு மேற்கூறிய காரணிகளுடன் சமூக பொருளதார காரணிகள் வறுமை சமூக வகுப்புக்கள் என்பனவும் காரணிகளாக அமைகின்றன.இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான கல்விக் கொள்கைகளுடன் சரியான கல்வித்திட்டமிடலும் அவசியமாவதுடன் அவை பிரதேச மாவட்ட மாகாண ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும்.