Home ஆய்வுகள் ஈழத்தமிழர் இனவழிப்பில் ரசியாவின் பங்கு-தமிழில் ந.மாலதி

ஈழத்தமிழர் இனவழிப்பில் ரசியாவின் பங்கு-தமிழில் ந.மாலதி

உள்நாட்டு விவகரங்களில் ஏனையவர் தலையிட கூடாது என்று சிறிலங்காவுக்கு அண்மையில் வருகை தரும் சீன, ரசிய உயர்மட்ட அரசியல்வாதிகள் வாய்மொழிந் தருளியுள்ளார்கள். இவர்களின் பொன்மொழிகளின் பின்னணியை சிறிது ஆராய்வோம்.

 இராணுவ ஹெலிகொப்டர்களும் போர்விமானங்களும் ஈழத்தமிழர் மேல் குண்டுமழை பொழிந்து மக்களை அழித்தொழித்தது ஈழத்தமிழரின் ஆழ்மனதில் என்றும் அழியாமல் பதிந்துவிட்ட கொடூரம்.

2001ம் ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தின் ஜெயசிக்குறு போர் நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் செக்மேற் நிலைக்கு கொண்டுவந்ததாலேயே போர்நிறுத்த ஒப்பந்தம் சாத்தியமானது. உடைக்கமுடியாதது என்று ஐ-அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் விபரித்த சிறிலங்கா இராணுவத்தின் ஆனையிறவு தளத்தை விடுதலைப்புலிகள் அப்போது உடைத்தார்கள்.cluster bomp ஈழத்தமிழர் இனவழிப்பில் ரசியாவின் பங்கு-தமிழில் ந.மாலதி

இஸ்ரேயிலினதும் ரசியாவினதும் கிபிர்,மிக் விமானங்கள் புறப்படும் தளங்களை கொண்டுள்ள கட்டுநாயகா விமானதளத்தின் மீது அன்றைய விடுதலைப்புலிகளின் தாக்குதல் அவர்களின் இராணுவ வல்லமையை உலகுக்கு அறிவுறுத்தியது.

ஜெயசிக்குறு தோல்வியால் ஆத்திரமடைந்த இனவழிப்பு சிந்தனையில் ஊறிய சிறிலங்கா அரசு, தமிழீழ நடைமுறை அரசை அழிப்பதற்காக கொடூரமான ஆயுதங்களையும் தமிழருக்கு எதிராக கையாளும் திட்டங்களை தீட்டியது. டிசம்பர் 2000ம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்கா ஆட்சி thermobaric ஆயுதங்கள் கொள்வனவு செய்ய முடிவு செய்தது.

ராஜபக்சா ஆட்சிக்கு முன்னரே, டிசம்பர் 2000ம் ஆண்டு,  சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு 10,000 Thermobaric Flamethrowers வாங்குவதற்கு முடிவு எடுத்ததை உறுதிப்படுத்தும் ஆவணம்.

சிறிலங்கா அரசின் தாக்குதல்களை எதிர்க்கும் விடுதலைப்புலிகளின் வல்லமையை அழித்த 2009 நடவடிக்கைகளை முக்கியமாக மேற்குலகமும் இந்தியாவும் இணைந்து ஒருங்கமைத்தது கொடுத்தது. அதே நேரம் தமிழீழத்தின் அழிவுகளை சீனாவும் ரசியாவும் பாகிஸ்தானும் கொடுத்த அழிவாயுதங்கள் நடத்தி முடித்தன.

இவற்றைவிட கொடுமையாக 2009இல் தமிழீழ தனியரசை சிதைத்த குண்டுகளாக இருந்தவை, ஐ-அமெரிக்காவும் இந்தியாவும் கொடுத்த மூலோபாய புலனாய்வுகள், வழிநடத்தல்கள், ஆகாய மற்றும் கடல் கண்காணிப்புகள் தான். அத்துடன் அவர்கள் கொடுத்த இராணுவ ரீதியான கிளர்ச்சி எதிர்ப்பு ஆலோசனைகளும் இருந்தன. அதே சக்திகள்தான் ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தின் மேல் ஒரு அரசியல் போரையும் அவிழ்த்துவிட்டு இருந்தன.

இதன் நோக்கம் தமிழர் போராட்டத்தின் உயிர்நாடியாக இருந்த புலம்பெயர் சமூகத்தின் ஆதரவை அழிப்பதே.

ஐ-அமெரிக்க கிளர்ச்சி-எதிர்ப்பானது ஆயுதங்கள் வழங்குவதாக கூறி, விடுதலைப்புலிகளின் இராணுவப்புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்திலிருந்த சில ஏமாளிகளை, கைது செய்து  அவர்களின் சொத்துக்களையும் முடக்கியது.

அதே நேரம், ஐ-அமெரிக்க இராணுவத்தின் புலனாய்வுடனும் ஆலோசனைகளுடனும் 30 மாதங்களாக இரகசியமாக தொடர்ந்த நடவடிக்கையில், விடுதலைப்புலிகளின் கப்பல்கள் சர்வதேச கடலில் தேடி அழிக்கப்பட்டன.

இதுவரை அறியப்பட்டவற்றில், நேரடியாக கொலைசெய்யாத ஆனாலும் மிகவும் தீர்க்கமான ஆயுதமாக அமைந்தது ஒன்றும் உண்டு. அதுதான் மே 2009 இல் ஐ-அமெரிக்க ஆலோசகரான Burns Strider அன்று ஐ-அமெரிக்க செயலாளராக இருந்து ஹிலரி கிளின்டனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்.

Strider ஹிலரியின் குரு. அவர் ஹிலரிக்கு அனுப்பிய மிக்கஞ்சலில் இவ்வாறு சொன்னார், ”விடுதலைப்புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காக சிறிலங்கா அரசால் பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அவ்வாறே களத்தில் நிற்கும் உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் பிரதிநிதிகள் கருதுகிறார்கள்”

2009இல் தமிழீழ நடைமுறையரசு அழிக்கபபட்டதற்கு கோத்தபாயாவின் திறமை காரணமல்ல. அவருடைய இனவழிப்பு சிந்தனையும் உலக சக்திகள் கொடுத்த மூலோபாய உதவிகளுமே காரணம்.

போரின் உச்சக் காலகட்டத்தில் “இந்திய மூவரும்“ “ரோக்கியோ இணைத்தலைமைகளும்“ ஆற்றிய பங்கைப்பற்றி அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிறிலங்கா பாராளுமன்னத்தில் ஆற்றிய உரையில் பதியப்பட்டிருக்கிறது. இந்திய மூவரில் இருவரான அன்றைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் M.K நாராயணன் மற்றும் அன்றைய  வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் இருவரையும் சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டார். அவர் குறிப்பிடாத மூன்றாமவர் விஜய் சிங் அன்றைய பாதுகாப்பு செயலாளர்.

சிறிலங்காவுக்கு வருகை தரும் ரசியாவின் வெளிவிவகார அமைச்சர், லவ்ரோவ், சிறிலங்கா பத்திரிகைக்கு கொடுத்த மின்னஞ்சல் நேர்காணலில் ஐ-அமெரிக்கா முன்வைக்கும் “சுதந்திர திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியம்” என்பது ஒரு ஒருங்கிணைக்கும் கோட்பாடு அல்ல என்றார். ”அதன் உண்மையதன நோக்கம் இப்பிராந்தியத்திலுள்ள அரசுகளுக்கிடையே அண்மையில் உருவாகியுள்ள உறவுகளை உடைத்து அவைகளை சிறு பிரிவுகளாக பிரித்து தனது மேலாதிக்கத்தை நிறுத்துவதே“ என்றார்.

அதிகார சக்திகள், ரசியா உட்பட,  கொண்டுவரும் அழிவுகளைப்பற்றி தமிழருக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தாலும் ரசியா வெளிவிவகார அமைச்சரின் கதையாடல் தீவிரவாத சிங்கள பௌத்த பிக்குகளின் கவனத்தை ஈர்க்கும். இனவழிப்பின் “புனித தலமான” இத்தீவில்  ஐ-அமெரிக்க பிரஜையான கோத்தபாயாவின் வருங்கால பங்கு எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு.

ரசியாவின் கொடூரமான ஆயுதங்கள் பற்றிய கவலை இப்போது தமிழருக்கு இல்லையெனினும், நேரடியாக கொலை செய்யாத ஆயுதங்களாக உள்ள கொழும்பு-மைய நோக்கிற்கு வலுவூட்டும் தற்போதைய உலக சக்திகளின் செயற்பாடுகள், தமிழர்கள் இத்தீவில் ஒரு தேசமான உள்ளதை எதிர்க்கிறது என்பது பற்றிய கவலை தமிழர்களுக்கு உண்டு.

இந்த இனவழிப்பு தீவின் “பிரிக்கமுடியாத பாதுகாப்பிற்காகவும்” சர்வதேச நீதியை வலுவிழக்கச் செய்யவும் ரசியா என்ன செய்யப்போகிறது என்பதை தமிழர் கவனமாக அவானிக்க வேண்டும்.

நன்றி தமிழ்நெற்

 

Exit mobile version