Tamil News
Home செய்திகள் இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது

இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது

புதிய இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

இந்த இடைக்கால அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் பிரதியமைச்சர்கள் என மொத்தம் 38 பேர் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர்.

இந்த 38 பேரில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் விபரம்

பாதுகாப்பு                                           – சமல் ராஜபக்ஸ

நீர்வழங்கல்                                         – வாசுதேவ நாணயக்கார

நகர அபிவிருத்தி                              – காமினி லொக்குகே

நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி – மகிந்த யாப்ப அபேவர்த்தன

காணி, காணி அபிவிருத்தி          – எஸ்.பி.திஸநாயக்க

பொருளாதார கொள்கைகள் அபிவிருத்தி – ஜோன் செனவிரட்ண

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் – மகிந்த சமரசிங்க

புகையிரத சேவைகள்                   – சி.பி.ரத்நாயக்க

தகவல் மற்றும் தொழில்நுட்பம்      – லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் – சுசந்த புஞ்சிநிலமே

உள்ளக வர்த்தக, நலனோம்பு – அநுர பிரியதர்சன யாப்பா

சர்வதேச ஒத்துழைப்பு                   – சுசில் ஜெயந்த

சுதேச வைத்தியம்                           – பிரியங்கர ஜயரத்ன

கல்விச் சேவைகள்                           – ரஞ்சித் சியம்பலப்பிட்டிய

மின்சக்தி                                              – மகிந்தானந்த அளுத்கமகே

இளைஞர் விவகாரம்                       – துமிந்த திஸநாயக்க

மின்வலு                                                – ரோகித அபேகுணவர்த்தன

கைத்தொழில்                                    – தயாசிறி ஜயசேகர

அரச முகாமைத்துவ, கணக்கீடு     -லசந்த அழகியவன்ன

முதலீட்டு மேம்பாடு                        – கெகலிய ரம்புக்வெல

சுற்றுலா மேம்பாடு                         – அருந்திக பெர்னான்டோ

தொழில்நுட்பம், புத்தாக்கம்       – திலங்க சுமதிபால

மனித உரிமைகள், சட்ட தீர்திருத்தங்கள் – மொஹான் டி சில்வா

மகளிர், சிறுவர் விவகாரம் – விஜித பேருகொட

மகாவலி அபிவிருத்தி                     – ரொசான் ரணசிங்க

ஏற்றுமதி கமத்தொழில்                 – ஜானக வக்கும்புர

கமத்தொழில்                                     – விதுர விக்கிரமநாயக்க

அபிவிருத்தி வங்கிகள், கடன் திட்டங்கள் – செஹான் சேமசிங்க

துறைமுக அபிவிருத்தி                  – கனக ஹேரத்

போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம் – திலும் அமுனுகம

நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி – லொஹான் ரத்வத்த

வனஜீவராசிகள் வளங்கள் – விமலவீர திஸநாயக்க

சுற்றாடல்                                             – ஜயந்த சமரவீர

கடற்றொழில், நன்னீர் மீன்பிடி – சனத் நிசாந்த பெரேரா

சமூக பாதுகாப்பு                              – தாரக பாலசூரிய

 

பிரதியமைச்சர்களாக பின்வருவோர் பதவியேற்றுள்ளனர்

சமுதாய வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு – நிமால் லன்சா

கடற்றொழில், நீரியல்வளம்        – கஞ்சன விஜேசேகர

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் – இந்திக அநுருத்த

ஆகியோரே இன்று பதவியேற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆவர்.

Exit mobile version