Tamil News
Home செய்திகள் தலைமையற்றுக் காணப்படும் தமிழ் சமூகம் சிறந்த முடிவொன்றை எட்ட வேண்டும்

தலைமையற்றுக் காணப்படும் தமிழ் சமூகம் சிறந்த முடிவொன்றை எட்ட வேண்டும்

கிழக்கு மாகாண சர்வமதத் தலைவர்கள் ஒன்றியத்தினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பொன்று இன்று (18) காலை திருகோணமலையில் இடம்பெற்றது.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நாட்டு மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவான கருத்துக்கள் வெளியிடப்பட்டது.

குறிப்பாக தலைமையற்றுக் காணப்படும் தமிழ் சமூகம் சிறந்த முடிவொன்றினை எடுக்க வேண்டும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்து.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் சேருவில மஹரஜமஹா விகாரையின் விகாராதிபதி முன்ஹேனே மெத்தானந்த தேரர், அரிசிமலை ஆரணிய சேனாசனத்தின் அதிபதி பன்னமுறே திலகவன்ச தேரர், தங்கனகர மெதடிஸ்த திருச்சபையின் மதகுரு எஸ்.சிறிகாந், வெருகல் மெதடிஸ்த திருச்சபையின் மதகுரு ஐசையா ஜோசப், மற்றும் தோப்புர் பெரிய பள்ளியின் மௌலவி பிஸ்ருள் ஹாபி ஆகியோர் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

 

Exit mobile version