Home செய்திகள் 80 வீத வாக்குப்பதிவு ; மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீத விபரம்

80 வீத வாக்குப்பதிவு ; மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீத விபரம்

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடுமுழுவதிலும் ஒட்டுமொத்தமாக 80 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கம்பஹா மாவட்டத்தில் 82 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 80 வீதமான வாக்கு பதிவாகியுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 80 வீதமான வாக்குப் பதிவும் கண்டி மாவட்டத்தில் 80 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் 83 வீத வாக்குப்பதிவுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீத வாக்குப் பதிவுகளும் யாழ் மாவட்டத்தில் 66.5 வீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 80 வீத வாக்குப் பதிவுகளும் அநுராதபுரம் மாவட்டத்தில் 75 வீத வாக்குப் பதிவுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 73 வீத வாக்குப் பதிவுகளும் வவுனியா மாவட்டத்தில் 75.12 வீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் 71.7 வீத வாக்குகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 76.2 வீத வாக்குகளும் புத்தளம் மாவட்டத்தில் 75 சதவீத வாக்குகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 85 வீத வாக்குகளும் பதுளை மாவட்டத்தில் 80 வீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டள்ளன.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் 82 வீத வாக்குப் பதிவுகளும் ஹம்பாந்தோட்டையில் 81 வீத வாக்குப் பதிவுகளும் கேகாலை மாவட்டத்தில் 80 வீத வாக்குப் பதிவுகளும் மொனராகலை மாவட்டத்தில் 80 வீத வாக்குப் பதிவுகளும் காலி மாவட்டத்தில் 80 வீத வாக்குப் பதிவுகளும் மாத்தளை மாவட்டத்தில் 79 வீத வாக்குப் பதிவுகளும் பொலனறுவை மாவட்டத்தில் 79 வீத வாக்குப்பதிவுகளும் மாத்தறை மாவட்டத்தில் 79 வீத வாக்குப் பதிவுகளும் கொழும்பு மாவட்டத்தில் 75 வீத வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.75572060 2471755812879285 2105277717346779136 n 80 வீத வாக்குப்பதிவு ; மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீத விபரம்