உக்ரைனில் இருந்து 88 லட்சம் மக்கள் வெளியேற்றம்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் காரணமாக அங்கிருந்து 8.79 மில்லியன் மக்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு இந்த வாரம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் நாள் போர் ஆரம்பமாகியதில் இருந்து அருகில் உள்ள நாடுகளை நோக்கி மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்த வருகின்றனர். 44 மில்லியன் மக்கள் கொகையை கொண்ட உக்ரைனில் இருந்து ஏறத்தாள 20 விகித மக்கள் தற்போதுவரை நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அதேசயம் உக்ரைன் இதுவரையில் 20 விகிதத்திற்கு மேலான நிலப்பரப்பையும் இழந்துள்ளது.

இதனிடையே, உக்ரைனில் இருந்து அறுவடை செய்யப்படும் தானிய வகைகளின் அளவு இந்த வருடம் 50 மில்லியன் தொன்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வருடம் அங்கு 86 மில்லியன் தொன்கள் அறுவடை செய்யப்பட்டிருந்து இங்கு குறிப்பிடத்தக்கது.