சமஷ்டி தீர்வே இலக்கு ! மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 7 கட்சிகளின் தலைவர்கள்

சமஷ்டி தீர்வே இலக்கு

இந்து

சமஷ்டி தீர்வே இலக்கு: புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வுதொடர்பாக  தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக  கோரிக்கைகள்  விடுத்து வரும் நிலையில் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி  அது குறித்து   எதுவும் குறிப்பிடவில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான ஏழு பக்கக் கடிதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளால் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மீரா ஸ்ரீநி வாசன்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த முன்னணி  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் நீண்டகாலமாக நிலுவையாகவிருந்துவரும்  தமிழ் மக்களின்  பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதை உறுதிசெய்யுமாறு இந்தியாவின் உதவியை நாடி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை  எழுதியுள்ளனர்.

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா .சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை கடந்த  செவ்வாய்க்கிழமை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் அதற்கு அப்பால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துவதற்கும் கொழும்பில் உள்ள பல்வேறு அரசாங்கங்களால் வழங்கப்பட்டிருந்த  நிறைவேற்றப்படாத பல வாக்குறுதிகளை ஏழு பக்க கடிதம் முன்வைக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  அங்கம்  வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா [இலங்கைத்தமிழரசுக்கட்சி ), தர்மலிங்கம் சித்தார் த்தன் (புளொட்), செல்வம் அடைக்கலநாதன் (டெலோ)  வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்[தமிழ் மக்கள் தேசியகூட்டணி ] மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்)ஆகியோர் கடிதத்தில்  கைச்சாத்திட்டுள்ளனர் , 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் காலத்திலிருந்து, பல்வேறு நிபுணர் குழுக்களால் உருவாக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் அரசியலமைப்பு தீர்வைக் கொண்டுவருவதற்கான கடந்தகால முயற்சிகளைக் கடிதம் குறிப்பிடுகிறது.

2015 ஆம் ஆண்டு இலங்கை பாரா ளுமன்றத்தில் பிரதமர் மோடிஉரையாற்றியிருந்தபோது “கூட்டுறவு சமஷ்டி”யில் தனது உறுதியான நம்பிக்கையைப் பற்றிகுறிப்பிட்டிருந்தமை உள்ளடங்கலாக , ​​பல்வேறு கட்டங்களில் இந்திய அரசியல் தலைமையின் தலையீடுகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமஷ்டி கட்டமைப்பு

“வடக்கு, கிழக்கில்எப்போதுமே பெரும்பான்மையாகவுள்ள  தமிழ் மக்களிடம் இருந்து பலமுறை ஆணையைப் பெற்ற வரலாற்றுபூர்வ வாழ்விடப் பிரதேசங்களில்  எங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும்சமஷ்டிக்   கட்டமைப்பின் அடிப்படையிலான அரசியல் தீர்வில்  நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான எங்கள் முன்மொழிவாக இதை நாங்கள் தொடர்ந்து முன் வைத்துள்ளோம், ”என்று கையொப்பமிட்டவர்கள் கூறியுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள்மற்றும்  மலையகத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் உட்பட தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமைகள் போன்றவற்றின் மீதான தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் முன்னிலைப்படுத்தி ,  அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதற்கான  அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின்சரத்துகளை  முழுமையாக அமுல்படுத்துவதற்கான அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு பிரதமர் மோடியிடம் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1987 முதல் அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவினரும் வழங்கிய தெளிவான உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கும்ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாட்டின் கட்டமைப்பிற்குள் சுயநிர்ணய உரிமையுடன் , தமிழ் பேசும் மக்கள் அவர்களின் வரலாற்றுபூர்வ வாழ்விடப் பகுதிகளில்கவுரவ த்துடனும், சுயமரியாதையுடனும், சமாதானத்துடனும் பாதுகாப்புடனும் வாழ இந்தியாவின் அழுத்தத்தையும் அவர்கள் கோரியுள்ளனர்.

தமிழ் எம்.பி.க்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறே இந்த கடிதமாகும். முன்னதாக இ ச்செயற்பாட்டில்  அங்கம் வகித்த முன்னணி   மலையக தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள், கடிதத்தில்  வலியுறுத்த ப்படிருந்த விடயங்கள் தொடர்பான    கருத்து வேறுபாடுகளையடுத்து  இதிலிருந்து வெளியேறினர். 1987 உடன்படிக்கையைத் தொடர்ந்து வந்ததும்ஆளும் ராஜபக்ச நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினர்களால் அடிக்கடி நிராகரிக்கப்பட்டதுமான 13வது திருத்தத்துடன் மட்டுப்படுத்தி   கடிதம் கொடுக்க அவர்கள் விரும்பினர்,

அந்தத் திருத்தம் “ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதிகாரப் பகிர்வுக்குப் பதிலாக அதிகாரப் பரவலாக்கத்தை செயற் படுத்துகிறது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்தப் பின்புலத்தில்தான், அதன்பின்மேற்கொள்ளப்பட்ட  ஒவ்வொரு முயற்சியும் சமஷ்டி  கட்டமைப்பை நோக்கிய  13வது திருத்தத்தை மேவும்  திசையை  நோக்கி நகர்ந்தது,” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச செவ்வாய்கிழமையன்று பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கொள்கைபிரகடன  அறிக்கையில், புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு  நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவைபற்றி  குறிப்பிட்டுள்ளார். “இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்துக்கும் பரந்தளவிலான  விவாதத்திற்காக சமர்ப்பிப்பேன் என்று நம்புகிறேன்,” என்று கூறிய அவர், புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வுதொடர்பாக  தமிழ் அரசியல் தலைமைகள்  தொடர்ச்சியாக  கோரிக்கைகள்  விடுத்து வரும் நிலையில் அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

மறுபுறம், அவர் இன நல்லிணக்கத்தை அபிவிருத்திக்கு சமமாக காட்டியதாக தென்பட்டது . “இந்த [போரினால் பாதிக்கப்பட்ட] மக்களுக்கு பாரபட்சமின்றி அத்தகைய வசதிகளை வழங்குவதே நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம்,” என்று கூறிய அவர், “பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை தற்காலிகமாவது ஒதுக்கிவைக்குமாறும் ” மற்றும் “உங்கள் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்குமாறும்” வடக்கு மற்றும் கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைஅவர்  வலியுறுத்தியுள்ளார்.

2019 நவம்பரில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ஜனாதிபதி ராஜபக்ச இன்னும் தமிழ் தலைமை அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 2021 ஜூனில் ஜனாதிபதி மற்றும்தமிழ்க்கூட்டமைப்பு பிரதிநிதிகள் இடையே சந்திப்புக்கு  திட்டமிடப்பட்டது. ஆயினும் ராஜபக்ச வின் அலுவலகம் சந்திப்பை இரத்து செய்ததுடன் , புதிய திகதி  அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது.

நன்றி- தினக்குரல் Tamil News