Tamil News
Home உலகச் செய்திகள்  7 பேர் விடுதலையை மறுப்பது அநீதி – பேரறிவாளனின் தாயார் கவலை

 7 பேர் விடுதலையை மறுப்பது அநீதி – பேரறிவாளனின் தாயார் கவலை

சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி கவலை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. 2018 ஆம் ஆண்டு ‘ என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம் ‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளங்களில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ‘ரிலீஸ் பேர‌றிவாளன்’ என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடல் தற்போது சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ‘சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி’ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version