Tamil News
Home உலகச் செய்திகள் 7 பேர் விடுதலையைத் தடுப்பது அநீதி – ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்

7 பேர் விடுதலையைத் தடுப்பது அநீதி – ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து அவர் வழங்கியுள்ளார்.

குறித்த கடிதத்தில் ”முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகளாகச் சிறையில் நீண்டகாலம் வேதனையை அனுபவித்து வரும்,  நளினி, .ஸ்ரீகரன் என்கிற முருகன்,  சாந்தன்,  பேரறிவாளன்,  ஜெயக்குமார்,  ராபர்ட் பயாஸ் மற்றும்  பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுவிக்குமாறு திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதை, தங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

”மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்திற்காகவும், தண்டிக்கப்பட்ட ஒரு நபருடைய தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 தெளிவாக எடுத்துரைக்கிறது” என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

”அமைச்சரவை பரிந்துரைத்த போதும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான, சரிசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்துவதுடன், அநீதி இழைப்பதும் ஆகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version