வடக்கு மாகாணத்தில் 639 பாடசாலைகள் மீள ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் 639 பாடசாலைகள்

வடக்கு மாகாணத்தில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 639 ஆரம்பப் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி இருப்பதாக மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது வடக்கு மாகாணத்தில் 639 பாடசாலைகள் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் இன்று 1 முதல் 05 ஆம் வகுப்பு வரை 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வருகை திருப்திகரமாக அமையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகை இருந்தாலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் குறைவாகக் காணப்பட்டமை தெரியவந்துள்ளது.

இன்று பாடசாலைகள் ஆரம்பித்தாலும் இன்றும் நாளையும் பணிக்கு வரமாட்டோம் என்று அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

ஆனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad வடக்கு மாகாணத்தில் 639 பாடசாலைகள் மீள ஆரம்பம்