Tamil News
Home உலகச் செய்திகள் 600 மில்லியனை தாண்டிய கோவிட் பெரும் தொற்று

600 மில்லியனை தாண்டிய கோவிட் பெரும் தொற்று

கோவிட்-19 நோயினால் இதுவரை 600 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உதியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மக்களால் பதிவுசெய்யப்பட்ட உத்தியோகபூர்வமாக தகவல்கள் ஆனால் பதிவு செய்யப்படாத தகவல்களை கணிப்பிட்டால் இந்த தொகை மிகவும் அதிகமாகலாம்.

உலகில் உள்ள 8 நாடுகளே இந்த தொகையின் அரைப்பங்கை வகிக்கின்றன. அமெரிக்காவில் 94 மில்லியன் மக்களும், இந்தியாவில் 44 மில்லியன் மக்களும், பிரான்ஸில் 35 மில்லியன் மக்களும், பிரேசிலில் 34 மில்லியன் மக்களும், ஜேர்மனியில் 32 மில்லியன் மக்களும், பிரித்தானியாவில் 24 மில்லியன் மக்களும், தென்கொரியாவில் 23 மில்லியன் மக்களும், இத்தாலியில் 22 மில்லியன் மக்களும் பதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 64 இலட்சம் மக்கள் இந்த நோயினால் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 10 இலட்சத்திற்கு மேற்பட்டவர்களும், பிரேசிலில் 6 இலட்சத்து 83 ஆயிரம் பேரும் இந்தியாவில் 5 இலட்சத்து 27 ஆயிரம் பேரும் மரணமடைந்துள்ளனர்.

தற்போதும் கோவிட்-19 நோயினால் பெருமளவான மக்கள் பாதிப்படைவதுடன், பிறள்வடைந்த கொரோனோ வைரசினால் அதிக தொற்றுக்கள் ஏற்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version