பயங்கரவாத தடுப்பு (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 6 மனுக்கள்

உயர் நீதிமன்றில் 6 மனுக்கள்

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கும் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த வாரம் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)” எனும் சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்திருந்தார்.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் என தெரிவித்து அதற்கு எதிராக சிவில் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதன் பிரகாரம் நேற்று பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியபோது நீதிமன்றம் அதுதொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பை சபைக்கு சபாநாயகர் அறிவித்தார்.

குறித்த அறிவிப்பில் “அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மனுக்களின் பிரதிகள் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த பிரதிகள் எனக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன“ என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News