முன்னாள் பெண் அதிபர் ஒருவர் உட்பட யாழில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலி

யாழில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாழில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலி: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னாள் பெண் அதிபர் ஒருவர் உட்பட மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்., கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட வயோதிபப் பெண்ணுக்குக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி, கம்பர்மலையைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரியில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உயிரிழந்த இருவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? – அகிலன்

உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 24 வயதுடைய இளைஞர் இருவருக்கும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த 68 வயதுடைய ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் செல்வி பா.மார்க்கண்டு என்பவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார் என்று உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-144-august-22-2021