இலங்கை தன்னிச்சையாக இரத்து செய்தமையால் 5,978 மில்லியன் ரூபா இழப்பு-கணக்காய்வு அறிக்கையில் தகவல்

ஜப்பானின் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – மாலம்பே இடையிலான இலகு ரக புகையிரத சேவையை, இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தமையின் காரணமாக 5,978 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இது தொடர்பான புதிய கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டைக் கோரி குறித்த ஜப்பான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தை நாடினால், அதனை விட பன்மடங்கு தொகையை மீள செலுத்த வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெறிசலைக் குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – மாலம்பேயிற்கிடையிலான இலகுரக புகையிரத சேவையை கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்துள்ளது.