Tamil News
Home செய்திகள் 5000 ரூபா கொடுப்பனவு என்பது இலங்கை அரசாங்கத்தின் போலி நாடகம் -செல்வம் அடைக்கலநாதன்

5000 ரூபா கொடுப்பனவு என்பது இலங்கை அரசாங்கத்தின் போலி நாடகம் -செல்வம் அடைக்கலநாதன்

கொரோனா பயணத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு  இலங்கை அரசாங்கம்  5000 ரூபாய் கொடுப்பதாகவும்  உலர் உணவு கொடுப்பதாகவும் சொல்லி ஏமாற்றி இருக்கின்றது.

இந்த நேரத்தில் அரசாங்கத்திடம் தமிழ் மக்கள்  கையேந்த கூடாது என்ற காரணத்தினால் புலம்பெயர்ந்த எங்களுடைய தமிழ் உறவுகள் பாரிய நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்த பயணத் தடைக்கு பின்பு சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்ற மக்களுக்கு மாத்திரமே இந்த 5000 ரூபா வழங்கப்பட்டிருக்கின்றது. அதுவும் மக்கள் ஏற்கனவே பெற்றிருக்கின்ற பெறுமதியை கழித்துவிட்டு தான் மிகுதி பணத்தை கொடுக்கின்றார்கள்.

ஏனைய கஷ்டப்படுகிற அன்றாடம் உழைக்கின்ற மக்களுக்கு 5000 ரூபா பணம் வழங்கப்படவில்லை. அது அரசாங்கத்தால் பிரதேச செயலகங்களுக்கு கொடுக்கவில்லை என்பதை நான் இங்கு கூறுகின்றேன். அந்த வகையில் இந்த அரசாங்கம் பயணத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட  எமது மக்களை 5000 ரூபா தருவதாக ஏமாற்றி இருக்கின்றது அரசு.

ஆகவே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பட்டினியாகவே நாட்களை கழித்து வருகிறார்கள். இந்த அரசாங்கம் பொய்யான தகவல்களை வெளியில் சொல்லி மக்களைை ஏமாற்ற வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்”  என்றார்.

Exit mobile version