Home செய்திகள் ஐந்து வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

ஐந்து வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

ஐந்து வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது, எங்கே எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பியிருந்ததோடு, உங்கள் இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள், தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா, ஐந்து வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

சுர்வதேச குற்றவியல் நீதிமன்றின் மூலமே எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கொண்டு இருக்கிறோம், எமக்கு சர்வதேசமே பதில் வழங்க வேண்டும். நாங்கள் ஒவ்வொரு மாதமும் வந்து ஒரு தெருக்கூத்து போடுவது போல் எண்ணலாம். ஆனால் நாங்கள் எங்கள் பிள்ளைகள், கணவன்மார், என பலரை கொடுத்து விட்டு வேதனைக்கு மத்தியிலேயே இவ்வார்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றோம். நாங்கள் கடந்த 12 வருடமாக வேதனையுடனும் கவலையுடனும்தான் இருக்கிறோம் என தெரிவித்தனர்.

 

Exit mobile version