Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
தற்கொலைக்கு முயன்ற 5 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றம் | October 3, 2023
Home செய்திகள் தற்கொலைக்கு முயன்ற 5 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றம்

தற்கொலைக்கு முயன்ற 5 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றம்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டதாக தி நியூ ஹியூமனிடேரியன் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் குடியேற்றத் தடுப்புக் கொள்கைகளுக்கு எதிரான சமீபத்திய பின்னடைவாக, குடிவரவு அதிகாரிகளின் பராமரிப்பில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 200 ஆதரவற்ற சிறார்கள் தொடர்பான செய்தி வெளியாகியுள்ள நிலையில், இந்தச் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட 5 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள், ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்கள் டியாகோ கார்சியாவில் 18 மாத சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிற நோய்களுக்காக உளவியல் சிகிச்சை மற்றும் ஏனைய சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த நவம்பரில் டியாகோ கார்சியாவிலிருந்து மூன்று புகலிடக் கோரிக்கையாளர்கள், ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டனர்.  இந்தநிலையில் குறித்த புகலிடக்காரர்களின் தற்கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், பிரித்தானிய அதிகாரிகள் தங்கள் பிரதேசத்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் உடனடி நலனுக்கான அனைத்து விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எமிலி மெக்டொனெல் (Emilie McDonnell) கோரிக்கை விடுத்துள்ளார்.

டியாகோ கார்சியாவில் உள்ள 94 புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர், 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது   படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர்.  22 வயதான யுவதி ஒருவர் தாம் கடந்த மார்ச் முதலாம் திகதி தற்கொலைக்கு முயன்றதாக தி நியூ ஹ்யூமனிடேரியனிடம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தான் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக பிரித்தானிய அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்ததன் காரணமாகவே தாம் இதனை செய்தததாக அவர் கூறியுள்ளார். அதே நாளில், அவரது சக புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் தையல் ஊசியை பாதியாக உடைத்து இரண்டு துண்டுகளையும் விழுங்கினார், தீவில் மேலும் மூன்று பேர் மார்ச் 13 அன்று இதேபோன்ற வழிகளில் தற்கொலைக்கு முயன்றதாக ஹம்ஷிகா கூறியுள்ளார்.

இந்த ஐவர் உட்பட 89 பேர் இலங்கை மற்றும் இந்தியாவை விட்டு வெளியேறி, கனடாவை அடைய முயன்றபோது, அவர்களது படகு அருகிலுள்ள கடற்பரப்பில் பழுதடைந்தது.  இதனையடுத்து பிரித்தானிய படையினர்; அவர்களை மீட்டு தீவில் வேலி அமைக்கப்பட்ட முகாமில் தடுத்து வைத்தனர்.  இந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் சிலர் இந்தியாவில் உள்ள ஏதிலி முகாம்களில் உள்ள இலங்கை பெற்றோருக்கு பிறந்தவர்கள், அங்கு அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது .

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version