வவுனியாவில் வாரத்திற்கு 45 மரணங்கள்- சுகாதார தரப்பு தெரிவிப்பு

வவுனியாவில் வாரத்திற்கு 45 மரணங்கள்

வவுனியாவில் வாரத்திற்கு 45 மரணங்கள்: வவுனியாவில் இம் மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 45 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில், கொரோனா மரணங்கள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அசமந்தமாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு தொடர்பில்  கருத்து தெரிவித்த சுகாதார தரப்பினர்,

வவுனியாவில் கொரோனா மரணங்கள் நாளுக்குநாள் மிக வேகமாக அதிகரித்து செல்கின்றது.  ஒரு வாரத்திற்கு ஒரு மரணம் என இருந்த நிலையில் கடந்த வாரம் 45 மரணம் சம்பவித்துள்ளது.

நாட்டில் ஏற்படும் மரண வீதத்தில் வவுனியாவில் மரணிப்போரின் தொகை பாரியளவில் உயர்ந்து காணப்படுகின்றது.

வவுனியாவில் மக்களின் அசமந்தமான செயற்பாட்டால் மரண தொகை கட்டுக்கடங்காமல் செல்கின்றது. எனினும் மக்கள் இதன் பாரதூரமான தன்மையை உணரவில்லை. இது பாரிய ஆபத்தான நிலைப்பாடாக உள்ளது.

இதேவேளை தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதானது தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் புதிய கொரோனா கொத்தணிகளை உருவாக்கிவிடலாம்.

வவுனியா மக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கிடைக்கப்  பெற்றுள்ளாதால் அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பதை மனதில் கொண்டு ஒரே முறையில் ஊசி ஏற்றும் நிலையங்களில் கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021