4 நாள் பயணமாக மகிந்த டெல்லி சென்றடைந்தார்

சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் மகிந்த ராஜபக்ஸவை மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றார்.

சிறீலங்காவின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபாயா ராஜபக்ஸ தனது முதல் வெளிநாட்டு விஜயமாக இந்தியா சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கோத்தபாயா ராஜபக்ஸ உறுதியளித்திருந்தார். அதன் பின்னர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்தியா சென்றார். அவரிடம் கோத்தபாயா ராஜபக்ஸ அளித்த உறுதிமொழி குறித்து இந்தியத் தரப்பில் நினைவூட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது 4 நாட்கள் விஜயமாக மகிந்த ராஜபக்ஸ டெல்லி சென்றுள்ளார். அங்கு வாரணவாசி, திருப்பதி உட்பட பல இடங்களுக்கும் மகிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளவுள்ளார்.

டெல்லிக்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ஸ முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.