Tamil News
Home உலகச் செய்திகள் 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின் சசிகலா இன்று விடுதலை

4 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின் சசிகலா இன்று விடுதலை

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று  விடுதலை செய்யப்படுகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி சசிகலா இன்று  விடுதலை செய்யப்படுகிறார். இதற்கு கர்நாடக போலீஸ் துறை அனுமதி வழங்கிவிட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் காலை 11 மணி அளவில் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து சசிகலாவை சந்திக்கிறார்கள். அவரிடம் விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து பெறுகிறார்கள். அதையடுத்து உணவு இடைவேளைக்கு பிறகு, சசிகலாவை முறைப்படி சிறை நிர்வாகம் விடுதலை செய்யும் என்று கூறப்படுகிறது.

சசிகலாவின் உடல் நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை   வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில்,

“66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார்.

கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version