38 அரச சார்பற்ற அமைப்புக்கள் குறித்து அரசாங்கத்தால் விசாரணைகள் ஆரம்பம்

38 அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச்செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்கள் நாட்டினுள் தடை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களில், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் அடங்குவதாக அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.