Tamil News
Home செய்திகள் நாட்டை விட்டு வெளியேறிய 350 வைத்தியர்கள்-சுகாதார அமைச்சு தகவல்

நாட்டை விட்டு வெளியேறிய 350 வைத்தியர்கள்-சுகாதார அமைச்சு தகவல்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 350 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் பணியாற்றுவதற்கு 2,837 விசேட வைத்திய  நிபுணர்களும்,  23,000 பொது வைத்தியர்களும் தேவைப்படுகின்றனர்.

இந்நிலையில், தற்போது 50 விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் 250 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளனர்.

நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதற்கு இடையூறாக தெரிவிக்காமல், சேவையை விட்டு  வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்ததன் மூலம் சுமார் 50 வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்து நாட்டில் தற்போதும் கடமையாற்றும் வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் சுகாதார அமைச்சு கலந்துரையாடி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 350 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார்.

Exit mobile version