Home செய்திகள் இந்திய இராணுவம்: யாழ் மருத்துவமனைப் படுகொலையின் 34 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு

இந்திய இராணுவம்: யாழ் மருத்துவமனைப் படுகொலையின் 34 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு

மருத்துவமனைப் படுகொலையின் 34 ஆவது நினைவு நாள்


இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா மருத்துவமனைப் படுகொலையின் 34 ஆவது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பேணி இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அங்கு கடமையில் இருந்த வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம், பிரதம தாதி உத்தியோகத்தர் திருமதி பா.வடிவேல், உட்பட தாதிகள், மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் என 68பேரை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version