இந்திய கடன் திட்டத்தின் கீழ் 34,000 மெட்ரிக் தொன் எரிபொருள் நாட்டை வந்தடையும் – காமினி லொக்குகே

34 000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு

34 000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு

இந்திய கடன் திட்டத்தின் மேலும் 34,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்க உள்ளதாக எரிசக்தி அமைச்சரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நாட்டிற்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நுவரெலியா -பதுளை வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசியத் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த டீசல் நுவரெலியா காவல் துறையினரின்  உதவியுடன் எரிபொருள் உரிமையாளருடன் கலந்துரையாடி வரிசையில் நின்ற வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதே நேரம் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத மக்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.