சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் இந்தியாவில் 31 பேர் பலி

நட்சுத்தன்மையுள்ள மதுபானம் அருந்தியதால் இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு பிராந்திய மாநிலமான பீஹாரில் உள்ள இரண்டு கிராமங்களில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மதுபான விற்பனைக்கு எதிராக அங்கு பெண்கள் அமைப்பு மேற்கொண்ட போராட்டங்களை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மாதுப்பாவனை அங்கு தடை செய்யப்பட்டது.

இந்த தடை அந்த பகுதியில் சட்டவிரோத மது வியாபாரத்தை அதிகப்படுத்தியதுடன், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபானங்களை அருந்திப பல நூறு பேர் அங்கு வருடம்தோறும் பலியாகி வருகின்றனர். தடை கொண்டுவரப்பட்டதில் இருந்து அங்கு 1000 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பலர் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலர் தமது கண்பார்வையை இழந்துள்ளதாக அந்த பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரி சந்தோஸ் குமார் தெரிவித்துள்ளார்.

அந்த பிரதேசத்தில் உள்ள சட்டவிரோத மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதுவரையில் 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமது வைத்தியசாலையில் 55 பேர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் சிலர் கண் பார்வையை இழந்துள்ளதாகவும், பலர் உயர் குருதி அழுத்தம், குருதியில் அதிக சக்கரை, போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியர் கோபால் கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.