210 Views
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.