Home உலகச் செய்திகள் இந்திய எல்லைப்  படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது

இந்திய எல்லைப்  படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது

இந்திய எல்லைப்  படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது

பங்களாதேஷில் இருந்து சட்ட விரோதமாக சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவிற்குள்   நுழைந்த 30 பெண்களை  இந்திய எல்லைப் படையினர் கைது செய்துள்ளனர்.

அதே நேரம் இந்த பெண்களை இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக கடத்திய குற்றச் சாட்டில் ஆறு இந்தியப் பிரஜைகளையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு இந்திய எல்லைக்குள் நுழையும் பெரும்பாலான பெண்கள் கடத்தல் காரர்களால் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறிய போலிக் காரணங்களினால் ஈர்க்கப் பட்டவர்கள் எனவும் எல்லைப் பாதுகாப்பு படையினரால் தெரிவிக்கப் படுகின்றது.

கோவிட் 19- தொடர்பான கவலைகள் இரு நாட்டிலும் பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறான கடத்தல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த குற்றச் சாட்டுக்காக எல்லைப் பாதுகாப்பு படையினர் கடந்த 2019ம் ஆண்டில் 2175 பங்களாதேஷ் பிரஜைகளை கைது செய்துள்ளனர். அதே போல் 2020ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,060ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version