Tamil News
Home செய்திகள் 300 பில்லியன் ரூபாய்களை அச்சிட்ட சிறீலங்கா மத்திய வங்கி

300 பில்லியன் ரூபாய்களை அச்சிட்ட சிறீலங்கா மத்திய வங்கி

சிறீலங்காவின் வருமானம் அதன் சுதந்திரத்திற்கு 70 வருடங்களுக்கு முன்னரான நிலைக்கு சென்றுள்ளதுடன், அரசு அதிகளவான பணத்தை அச்சிட்டு வருகின்றது. 300 பில்லியன் ரூபாய்களை சிறீலங்கா மத்தியவங்கி அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நாட்டில் பணவீக்கம் மிக விரைவில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதே பொருட்களின் விலைகள் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது சிறிலங்கா மக்கள் விளைவுகளை தற்போதே அனுபவிக்க தொடங்கியுள்ளனர். இது பணம் அச்சிடுவதற்கு முன்னைய நிலை எனவே வருங்காலத்தில் நிலமை மேலும் மோசமடையலாம்.

இதுவரையில் 6 இலட்சம் பேர் சிறீலங்காவில் வேலையிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதனை விட அதிகம். சிறீலங்காவின் புடவை ஏற்றுமதி பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. கோவிட்-19 இற்கு முன்னரே சரிவைச் சந்தித்த பொருளாதாரம் தற்போதைய நிலையில் பேரழிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version