மட்டு: வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு -ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பின் முதல் தாக்குதல் 

வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு

மட்டு: வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு -ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பின் முதல் தாக்குதல்: ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாரானின் குழவின் முதலாவது தாக்குதல் 2018 நவம்பர் 30 வவுணதீவு வலையிறவு பாலத்தில் காவல்கடமையில் இருந்த காவல்துறை சாஜன்களான கணேஸ் டினேஸ்.  நிரோசன் இந்திக  பிரசன்னா ஆகிய இரு காவல்துறையினரை கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும்  படுகொலை செய்யப்பட்ட அந்த கறைபடிந்த சம்பவம் இடம்பெற்று  இன்று 3 வருடங்களாகும்.

கடந்த 2018 நவம்பர் 29 ம் திகதி இரவு வவுணதீவு காவல் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் டினேஸ். காவல்துறை சாஜன் பிரசன்னான ஆகிய இருவரும் வலையிறவு பாலத்திலுள்ள காவல் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த நிலையில் 30 ம் திகதி அதிகாலை 2 மணியளவில் அவர்களை கத்தியால் குத்தியும் துப்பாக்கியால்  சுட்டு படுகொலை செய்துவிட்டு காவல்துறையினரின் கைதுப்பாக்கியான ரிவோல்வரர் ரக துப்பாகி இரண்டையும் எடுத்து கொண்டு சென்றுள்ளனர்.

மட்டு: வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு -ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பின் முதல் தாக்குதல் 

காவல்துறையினர் சோதனைச் சாவடிக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றபோது தான்; காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கே தெரியவந்துள்ளது.  இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் அரச புலனாய்வுத்துறையினர் இதனை விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பதாகவும் முன்னாள் போராளியான அஜந்தன் என்பவரே செய்திருப்பதாக நம்பினர்.

அதற்கான காரணம் அந்த நவம்பர் 27ம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகும் அந்த மாவீரர் தினத்தினை தாண்டியடியில் உள்ள மாவீரர் மயானத்தில்  செய்வதற்கு முன்னாள் போராளியான அஜந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டபோது அங்கு காவல்துறையினருக்கும் முன்னாள் போராளியான அஜந்தனுக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டது.

WhatsApp Image 2021 11 25 at 09.22.07 1 மட்டு: வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு -ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பின் முதல் தாக்குதல் 

இந்த சர்ச்சை காரணமாக புலனாய்வு துறையினரும் காவல்துறையினரும்  இந்த காவல்துறையினரின் படுகொலையை முன்னாள் போராளி அஜந்தன் செய்திருக்க வேண்டும் முடிச்சுப் போட்டதுடன் அதனை முன்னாள் போராளி அஜந்தன் செய்துதிருக்க வேண்டும் என அரசு புலனாய்வாளர்கள் முடிவெடுத்து தமது தலைமை காரியாலயத்துக்கு அறிவித்ததையடுத்து காவல்துறை  புலனாய்வாளர்கள் அஜந்தன் செய்வதற்கான வாய்ப்பு இல்லை மாடுகடத்தும் கும்பல் செய்திருக்கலாம் என அந்த பகுதியையும்; விசாரணை மேற்கோள்ளவேண்டும் என காவல்துறை  உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

IMG 2157 மட்டு: வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு -ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பின் முதல் தாக்குதல் 

ஆனால் அப்போது இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் இல்லை அரச புலனாய்வாளர்களின் தகவல் தான் சரி என முன்னாள் போராளியான அஜந்தனை 2018 சம்பர் 3 ம் திகதி கைது செய்ததுடன் அவரின் நண்பனான கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியையும் கிள்நொச்சியில் வைத்து கைது செய்து வவுணதீவி காவல்துறை  நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு காவல்துறை  தடுப்பு காவலில் வைத்து  விசாரணை செய்தனர். இதன் பின்னர் கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியை விடுதலை செய்தனர். அதேவேளை அஜந்தனை கொழும்புக்கு கொண்டு சென்று 4ம் மாடியில் வைத்து விசாரணை செய்தனர் அப்போது கூட அஜந்தன் தாங்கள் இந்த தாக்குதலை  செய்யவில்லை என தெரிவித்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் மாதம் 6 கடந்த நிலையில் 2019 ஏப்பிரல் 19 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதையடுத்து ஏப்பில் 27 ம் திகதி சாரான் ஷாசிமின் சாரதியான கபூர் மாமா என் அழைக்கப்படும் முகமது சரிப் ஆதம்பா லெப்பை கபூர், மற்றும் முகமது ஆசிம் சியாம், முகைதீன் இம்ரான் ஆகியேரை கைது செய்து விசாரணையின் போது ஜ.எஸ்.ஜஎஸ். தீவிரவாதிகளான இவர்கள் தான் இந்த தாக்குதல்; மேற்கொண்டுள்ளதாக தெரியவந்தது .

திஹாரியில் வேலை ஒன்று இருக்கின்றது அதற்கு ரி.56 துப்பாக்கிகள் தேவை எனவே  அதனை எடுக்குமாறு  வவுணதீவு காவல்துறை சம்பவம் இம்பெறுவதற்கு ஒரு மாத்திற்கு முன்னர் சாரான் கட்டளையிட்டிருந்தார். இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு 3 தினங்களுக்கு முன்னார் கொழும்பில் வைத்து கபூர் மாமாவிடம் ரி.56 ரக துப்பாக்கியை கொடுத்து சஹரான் அவரை கொழும்பு அக்கரைப்பற்று பஸ்வண்டியில் ஏற்றி அனுப்பியுள்ளார்.

கபூர் துப்பாக்கியுடன் காத்தான்குடியில் வந்து இறங்கிய போது ஆயத்தமாக இருந்த கார் ஒன்றி ஏறி ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள அவர்களது பண்ணை வீட்டு முகாமில் ஆயுதத்தை மறைத்துவைத்தனர்.

இதன் பின்னர் சிரியாவில் ஜ.எஸ்.. அமைப்பில் ஆயுத பயிற்சி பெற்ற முகமது ஆப்தீன் நில்கான் தலைமையில் திட்டமிடப்பட்டு 29 ம் திகதி இரவு ஒரு மணிக்கு  ஒல்லிக்குளம் முகாமில் இருந்து  கபூரும் நில்கானும் சூட்டி ரக மோட்டர்சைக்கிள் உட்பட இரு மோட்டர்சைக்கிளில்  துப்பாக்கியும் மாறு அறுக்க பயன்படுத்தப்படும் கூரிய கிறிஸ் ரக கத்தியையும் எடுத்துக் கொண்டு காத்தான்குடி பகுதிக்கு வரும்போது இடையில் காத்திருந்த இம்ரானை ஏற்றிக் கொண்டு

கல்லடி பாலத்தின் ஊடாக மட்டக்களப்பு நகருக்குள் டிசன்று அங்கிருந்து செங்கலடி ஊடாக கரடியனாறு ஆயித்தியமலை சென்று வவுணதீவு சந்திக்கு சென்ற நிலையில் அங்கு காத்திருந்த ஆசிம் சியாம் வலையிறவு பாலத்திலுள்ள காவல்துறையினரின் சோதணைச் சாவடிக்கு சென்று 2.40 மணியளவில் அங்கு நித்திரையில் இருந்த  காவல்துறை சாஜன் பிரசன்னாவை கத்தியால் குத்தி தாக்கியதுடன் காவல்துறை சாஜன் டினேசை ஒருவர் மடக்கி பிடிக்க ஒருவர் கத்தியால் குத்தி தாக்கி பின்னர் அவர்கள் இருவர் மீதும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்

இதன் பின்னர் காவல்துறையினரிடம் இரு ரிவோல்வர்களை எடுத்து கொண்டு கொக்கடிச்சோலை ஊடாக மண்முனை பாலத்திற்கு சென்று ஒல்லிக்குளம் முகாமைச் சென்றடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலைமை வகித்த நில்கான் சவுதிக்கு சென்றிருந்த நிலையில் அவரை அங்கு கைது செய்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் வலையிறவு சோதனைச் சாவடிக்கு 4 பேரையும் கொண்டுவரப்பட்டு ஒத்திகைபார்கப்பட்டது

இதன் பின்னர் காவல்துறையினரிடம் எடுத்துச் சென்ற கைதுப்பாகியான ரிவோல்வர் இரண்டையும் புத்தளத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் புலனாய்வு பிரிவினர் மீட்டனர்.

இந்த தாக்குதலை ஜ.எஸ். அமைப்பின் விடுதலைப் புலிகளின் பக்கம் திசை திருப்ப தெரிவு செய்யப்பட்ட நாள்தான் இந்த நவம்பர் 29 ம் திகதி எனவும் ஆயுதங்கள் எடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட  இடம் தான் இந்த வலையிறவு காவல்துறையினரின் சோதனைச்சாவடி என்பதுடன் வெற்றிகரமாக இடம்பெற்ற ஜ.எஸ். அமைப்பின் முதல் தாக்குதல் என கைது செய்யபப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்தது

இந்த தாக்குதல் சாரான் ஹாசிமின் குழுவினர் தான் செய்தனர் என வெளிவந்ததையடுத்து கைது செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டிருந்த  முன்னாள் போராளி அஜந்தனை 2019 ம் ஏப்பில் 30 திகதி விடுதலை செய்தனர்

இந்த தாக்குல் தொடர்பாக அரச புலனாய்வாளர்கள் ஒரு பக்கமாக முன்னாள் விடுதலைப் புலிகள் பக்கம் மட்டும் தமது திசையை செலுத்தி விசாரணையை மேற்கொண்டுள்ளனர் என்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஜஎஸ். அமைப்பினரின் மூலம் புலப்படுகின்றது.

மாமா மட்டு: வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு -ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பின் முதல் தாக்குதல் 

அரச புலனாய்பு பிரிவு மற்றும் பொலிசார் விடுதலைப் புலிகள் பக்கம் அல்லாது ஏனைய பக்கமாக இந்த விசாரணையை மேற்கொண்டிருந்தால் அப்போது ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான சாரான் ஷhசிமின் உடைய குழுவினரை கைது செய்திருக்க முடியும் அதேவேளை இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றிருக்காது என்பதுடன் அப்பாவி பொதுமக்கள் சுமார் 400 பேரின் உயிரிழப்பை தவிர்திருக்க முடிந்திருக்கும்.

1 4 மட்டு: வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு -ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பின் முதல் தாக்குதல் 

இருந்தபோதும் காவல்துறையினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை முன்னாள் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் செய்யாதா ஒன்றினை செய்ததாக அவர்கள்  மீது  சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டு 6 மாத்தின் பின்னராவது அந்த தாக்குதலை ஜ.எஸ். அமைப்பினர் செய்துள்ள உண்மை உலகுக்கு தெரியவந்துள்ளதுடன் பாதுகாப்பு படையினரும் அரசும் தமிழ் மக்கள் மீதும் முன்னாள் போராளிகளின் மேல்; இருந்த சந்தேகம் மற்றும் கழுகுபார்வையும் தற்போது  மாறுபட்டுள்ளது.

இன்று இந்த தாக்குதல் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.

கனகராசா சரவணன்
ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad மட்டு: வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு -ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பின் முதல் தாக்குதல்