Home உலகச் செய்திகள் பாகிஸ்தான் அணி வெற்றியைக் கொண்டாடியதாகக் கூறி 3 மாணவர்கள் இந்தியாவில் கைது

பாகிஸ்தான் அணி வெற்றியைக் கொண்டாடியதாகக் கூறி 3 மாணவர்கள் இந்தியாவில் கைது

பாகிஸ்தான் அணி வெற்றி


இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கடந்த ஞாயிறன்று நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடியதாக கூறப்பட்டு காஷ்மீரை சேர்ந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில்   கடந்த ஞாயிறன்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13-வது முறையில் தற்போது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் வரலாற்று வெற்றி பெற்றதை அந்நாட்டுமக்கள் கொண்டாடினார்கள். ஆனால், அதை இந்தியாவில் உள்ள காஷ்மீர் மக்களும் கொண்டாடியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி, 3 மாணவர்களை கைது செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குறித்து காவல்துறையினர் கூறுகையில்,  குறித்த மாணவர்கள் `இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்களை` எழுப்பியதாக  தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மீது “பகைமையை தூண்டியது மற்றும் சைபர் பயங்கரவாதம்” போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவின் இந்த தோல்விக்கு பிறகு அணியில் உள்ள முஸ்லிம் கிரிக்கெட் விரரான முகமது ஷமி சமூக வலைதளங்களில் பெரிதும் தாக்கப்பட்டார். அவர் வேண்டுமென்றே பாகிஸ்தான் அணிக்கு ரன்களை வாரி வழங்கினார் என சமூக வலைதளங்களில் பலர் சாடினர். ஆனால் ஷமிக்கு ஆதரவாக இந்தியாவில் பல பிரபலங்கள் தங்களின் ஆதரவுகளை வழங்கியுள்ளனர்.

 

Exit mobile version