Home செய்திகள் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் 3 கட்சிகள் கூட்டாக செயற்படுவதற்குத் தீர்மானம்

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் 3 கட்சிகள் கூட்டாக செயற்படுவதற்குத் தீர்மானம்

10 தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் 3 கட்சிகள் கூட்டாக செயற்படுவதற்குத் தீர்மானம்தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாக செயற்பட தீர்மானித்துள்ளன. இந்த செயற்பாட்டில் ஏனைய சிறு கட்சிகளையும் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பும் விடுக்கப்படவுள்ளது.

ஜேவிபி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில், ஜேவிபி சார்பாக அனுர குமார திசாநாயக்க எம்பி, விஜித ஹேரத் எம்பி, மனோ கணேசன் எம்பி, ரவுப் ஹக்கீம் எம்பி, வேலுகுமார் எம்பி, உதயகுமார் எம்பி, முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர், தமுகூ-ஐமமு கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணிதரன் முருகேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன சிறுபான்மை கட்சிகளும், அரசியல் சிறுபான்மை கட்சிகளும், ஒருமுகமாக எதேச்சதிகார தேர்தல் முறை மாற்ற நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் சிறிய கட்சிகளுக்கு சாதகமான சில அம்சங்கள் உள்ளன. அவற்றை மாற்றியமைக்க வேண்டும். பிரதான கட்சிகள் சில கோரிக்கை முன்வைத்துள்ள நிலையிலேயே நேற்றைய சந்திப்பு அவசரமாக இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாட்டை பாராளுமன்ற தெரிவுக்குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version