யாழ். மாவட்டத்தில் இதுவரையில் 276 பேர் கொரோனாவால் பலி

276 பேர் கொரோனாவால் பலி

276 பேர் கொரோனாவால் பலி: இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் யாழ்.மாவட்டத்தில்  இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 276ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், 30 சடலங்களுக்கும் அதிகமானவை தேங்கும் சாத்தியப்பாடு உள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மத்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு அறிக்கையிட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி உயிரிழந்தவர்களின் சடலங்களை எதிர்வரும் 09ஆம் திகதியே தகனம் செய்யமுடியும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் நாளாந்தம் ஐந்து சடலங்கள் என்ற அடிப்படையில் சடலங்கள் எரியூட்டப்படுவதாலேயே இந்தச் சிக்கல் நிலவுவதாகத் தெரிய வருகிறது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் நாள் தோறும் ஐந்துக்கும் அதிகமான மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படை யில் 30இற்கும் அதிகமானோரின் சடலங்கள் தேங்கியிருக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

இது குறித்து மத்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு அறிக்கை ஊடாக சுட்டிக் காட்டியுள்ள வடக்கு சுகாதாரத் திணைக்களம், சடலங்களை தொடர்ந்தும் பராமரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன என்றும் மாற்று நடவடிக்கைகள் அவசி யம் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021