ஆப்கானிஸ்தான் மோதலில் சிக்கி 27 குழந்தைகள் பலி- ஐ.நா தகவல்

2755006 1178107285 ஆப்கானிஸ்தான் மோதலில் சிக்கி 27 குழந்தைகள் பலி- ஐ.நா தகவல்

ஆப்கானிஸ்தான் அரச படைகளுக்கும் தலிபான்களுக்கும்   இடையே  நடக்கும் மோதலில் சிக்கி  குறைந்தது 27 குழந்தைகள்  உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது.

“குழந்தைகளுக்கு எதிரான கடுமையான உரிமை மீறல்கள் மிகவும் விரைவாக அதிகரித்து வருவது” அதிர்ச்சியளிப்பதாகக ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான Unicef கூறியுள்ளது.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதையடுத்து பல பகுதிகளிலும் தலிபான்கள் முன்னேறி வருகின்றனர். மேலும்  கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறு மாகாணங்களின் தலை நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

இரு தரப்பு மோதலை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச அழைப்புகளையும் தாலிபன்கள் நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் தாலிபன்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக கந்தஹார், கோஸ்ட் மற்றும் பக்தியா ஆகிய மூன்று மாகாணங்களில் 27 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் சுமார் 136 குழந்தைகள்  காயமடைந்திருப்பதாக Unicef கூறுகிறது. அத்துடன் கடந்த மாதத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே மாதம் ஐ.நா வெளியிட்ட ஓர்  தகவலில் ஆப்கானிஸ்தானில், கடந்த 5 வருடங்களில் வான்வழித் தாக்குதலில் 1,600 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-141-august-01-2021