சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக அசாமில் குழந்தைகள் உட்பட 24 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது

214221679 1379288159110255 565434447389696273 n சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக அசாமில் குழந்தைகள் உட்பட 24 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது

அசாமில் கடந்த இரண்டு நாட்களில் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக 7 குழந்தைகள் உட்பட 24 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டம் பதார்பூரில் கடந்த 24-ம் திகதி சில்சர்-அகர்தலா இரயிலில் ஏற முயன்ற 6 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 15 ரோஹிங்கியா முஸ்லிம்களை அரசு இரயில்வே  காவல் துறையினர் (ஜிஆர்பி) கைது செய்தனர். இவர்கள் அனைவரிடமும் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களாக கருதப்படுவார்கள் என இரயில்வே  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபோல, குவாஹாட்டி இரயில் நிலையத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 9 ரோஹிங்கியா முஸ்லிம்கள் நேற்று காலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் போலி அடையாள அட்டை இருந்ததாக இரயில்வே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021