தாய்லாந்தில் மனித கடத்தல் கும்பல் வசமிருந்த 23 ரோஹிங்கியாக்கள் மீட்பு

மனித கடத்தல் கும்பல்

தாய்லாந்தில் Tak மாகாணத்தில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மனித கடத்தல் கும்பல் வசமிருந்த 23 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர். 

மியான்மரிலிருந்து தாய்லாந்துக்குள் ரோஹிங்கியாக்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

முதல் இடத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 16 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 20 ரோஹிங்கியாக்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர். மற்றொரு இடத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், 2 பெண்கள், 1 ஆண் உள்பட 3 ரோஹிங்கியாக்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுடன் ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் தந்ததாக 61 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹிங்கியாக்களை மலேசியாவுக்கு கடத்திச் செல்வதற்கு முன்பு அவர்களை மனித கடத்தல்காரர்கள் தனது இடத்தில் தங்க வைத்திருந்ததாக, அந்நபர் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021