Tamil News
Home உலகச் செய்திகள் கோவிட்-19 நோயினால் இந்த வருடம் அமெரிக்காவில் 225,000 பேர் பலி

கோவிட்-19 நோயினால் இந்த வருடம் அமெரிக்காவில் 225,000 பேர் பலி

 கோவிட்-19 நோயின் தாக்கம் குறைந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்து வருகின்றபோதும், அந்த நோயினால் இந்த வருடத்தில் மட்டும் 225,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரசினால் அமெரிக்காவில் தினமும் பல நூறு மக்கள் மரணித்து வருகின்றனர். இதுவரையில் அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், உலகம் முழுவதும் 6.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேசமயம், இந்த நோயினால் உலகம் முழுவதும் 623 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் கோவிட் நோய் கட்டுப்பாடுகளை பல நாடுகள் தளர்த்தியுள்ளபோதும் இந்த நோயின் தாக்கத்தை அவர்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

மேலும் குளிர்காலம் பல நாடுகளில் ஆரம்பித்துள்ளதால் மீண்டும் புதிய அலை உருவாகலாம் என்ற அச்சமும் எற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version