Home செய்திகள் 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க கோத்தபாயவுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கியது இந்தியா

21 பீரங்கிக் குண்டுகள் முழங்க கோத்தபாயவுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கியது இந்தியா

516 Views
மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சாவிற்கு இந்தியா மிகப் பெரும் வரவேற்பு வழங்கியது தமிழ்மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கவலைகளையும் தோற்றுவித்துள்ளது.

 

இன்று புதிடில்லியில் உள்ள ராஜ்பவனில் இடம்பெற்ற வரவேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் ஆகியோர் கோத்தபாயவை வரவேற்றதுடன் 21 பீரங்கிக் குண்டுகள் வானை நோக்கி சுடப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கோத்தபாயவின் வரவுக்கு எதிராக தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் பேராட்டங்களை மேற்கொண்டு வருகையில் இந்தியா அதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பது தமிழ் மக்களை கவலையடைய வைத்துள்ளது.

இதனிடையே, சிறீலங்காவில் உள்ளஎல்லா இன மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றுவேன் என கோத்தபாய எம்மிடம் உறுதியளித்துள்ளார். எனவே அதனை நாம் அவதானிப்போம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியன் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version