2024இல் தமிழ்த்தேசிய  அரசியலின் வீழ்ச்சி  – 2025இல் எழுச்சி வருமா..? – பா.அரியநேத்திரன்

இன்னும் இரண்டு தினங்களால் 2025, புதுவருடம் பிறக்கிறது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்று எம் முன்னோர்கள் கூறுவது உண்டு ஆனால் அது ஈழத்தமிழர்களுக்கு இல்லை. 2024இல் தமிழ்த்தேசிய அரசியல் எவ்வாறு இருந்தது?

தமிழ்தேசிய அரசியலில் பிரதான வகி பாகத்தை செலுத்தும் இலங்கைத் தமிழ் அரசியல் கட்சி 2024இல் பல தடைகள், துரோகங்களை சந்தித்த ஆண்டாகவே கடந்தது. 2024, ஜனவரி21இல் கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது அதில்  321, தமிழரசுக்கட்சி பொதுச்சபை உறுப்பினர்கள் வாக்களித்து 184, வாக்குகளை பெற்று கட்சி தலைவரான சிவஞானம் சிறிதரன்.137, வாக்குகளை பெற்று நிராகரிக்கப் பட்ட மதியாபரணம் சுமந்திரன் என்பவரின் தலையீட்டால் அந்த கட்சி 17, வது மாநாடும் புதிய நிர்வாக தெரிவும் இடம்பெறாவண்ணம் நீதிமன்றத்தில் தொடர் வழக்குகளால் அந்த கட்சி மாநாடு நடத்தமுடியாத நிலை தொடர்ந்து செல்கிறது போதாக்குறைக்கு தற்போதய தலை வராக தொடரும் மாவை சேனாதிராசாவையும் பிடரியில் பிடித்து தள்ளும் நிலை அவருக்கே ஏற்பட்டுவிட்டது. அவருடைய அதிருப்திகளான நடவடிக்கையால் திட்டமிட்டு பதவியில் இருந்து அவரை விலக்க மத்தியகுழுவில் ஒரு பிரிவினர் முயற்சிக்கின்றனர்.

2024இல், மட்டும் தமிழரசுக்கட்சிக்கு எதி ராக கட்சி உறுப்பினர்களே நான்கு வழக்குகள் தொடர்ந்துள்ளனர், 2024, பெப்ரவரி, 15இல் இர ண்டு வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் பராசந்திரசேகரமும்,யாழ்ப்பாண நீதிமன்றில் முல்லைத்தீவு பீற்றர் இளஞ்செழியனும் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளும் இதுவரை கடந்த ஆண்டு பெப்ரவரி 29,ஏப்ரல் 05, ஏப்ரல் 23, மே 31, யூலை19, என ஐந்து தவணைகள் இடம்பெற்றும் ஆறாவது தவணைக்காக எதிர்வரும் 2025, பெப் ரவரியில் காத்துக்கிடக்கிறது.

இதைவிட மேலும் இரண்டு வழக்குகள் கடந்த 2024, அக்டோபர்,10,ல் மட்டக்களப்பு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா தாக்கல் செய்து அது கடந்த நவம்பர்,18இல் எடுக்கப்பட்டு அடுத்த தவணை 2025,  ஜனவரி, 22இல் உள்ளது. மேலும் ஒருவழக்கு யாழ் நீதிமன்றில் 2024,டிசம்பர், 27இல் முல்லைத்தீவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் தாக்கல் செய்யப்பட்டு எதிர்வரும் 2025, ஜனவரி, 06இல் அந்த வழக்கு இடம்பெற உள்ளது. இவ் வாறு மொத்தமாக நான்கு வழக்குகள் தந்தை செல்வாவால் 1949, டிசம்பர் 18இல் ஆரம்பமாகி 75, வது பவளவிழாவில் தமிழரசுகட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குழப்பநிலை எதிர்வரும் 2025இல் மீண்டு எழுமா என்பதை பார்ப்போம்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவான 2001, தொடக்கம் 2024, வரை அதன் தலைவராக செயல்பட்ட  இரா. சம்பந்தன் கடந்த வருடம் 2024, யூன் 30இல் இயற்கை எய்தினார். அவர் இனப் பிரச்சினைக்கு அருடைய காலத்தில் ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்ற கனவோடு இருந்தே மரணித்தார்.

அவர் கூட உயிரோடு உள்ள போது தமிழ ரசுக்கட்சிக்கான ஒரு தலைவரை ஒற்றுமையாக தெரிவு செய்திருக்க பல வாய்ப்புக்கள் இருந்தும் அதில் இருந்து அவர் தவறிவிட்டார்.

தமிழ் தேசிய அரசியலில் அடுத்த முக்கிய இடத்தை பெற்றது கடந்த 2024, ஜனாதிபதி தேர்தல் கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலிலும் இவ்வாறான ஒரு முடிவு எடுக்காமல் முதல் தடவையாக ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ்தேசிய கொள்கையையும்,உறுதியான நிலைப்பாட்டையும் வலியுறுத்தி தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென 83.தமிழ் சமூக அமைப்புகள், ஏழு தமிழ்த்தேசிய கட்சிகள், புலம்பெயர் அமைப்பு கள், முன்னாள் போராளிகள், பல்கலை மாணவர் சமூகம் என பலதரப்பட்டவர்களின் ஏகோபித்த முடிவு அடிப்படையில் தமிழ்த்தேசியவாதியான மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் 2024,செப்டம்பர்,21, ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சுயேட் சையாக சங்கு சின்னத்தில் வேட்பாளராக நிறுத் தப்பட்டார்.

அவரை தோற்கடிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழுவில் சுமந்திரனால் தூண்டப்பட்ட 16,பேர் எதிர்த்து சிங்கள வேட்பாளர் சஜீத் பிரமதாசாவை எந்த ஒரு உத்தரவாதமும்  இன்றி ஒரு கருவியாக அவரை பாவித்து தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிரான பிரசாரத்தை முன்எடுக்க தீர்மானித்து அவரிடம் நன்கொடைகளை பெற்று பிரசாரம் மேற் கொண்டனர்.

இருந்த போதிலும் அவர்களால் தமிழ் தேசிய கொள்கையை தோற்கடிக்க முடியவில்லை, தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் மொத் தமாக 226,343 வாக்குகளைப் பெற்று வரலாற்றில் ஒரு தமிழன் அதிகூடிய வாக்குகளை பெற்றார் தமிழ்தேசிய கொள்கை உறுதியை நிருபித்தார்.

அந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசநாயக்கா வெற்றிபெற்றவுடன்  2024, நவம்பர் 14இல் தேர்தலை நடத்தினார். இந்த தேர்தலில் இலங்கை வரலாற்றில் தேசிய மக்கள் சக்தி 159, ஆசனங்களை பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் தமிழ்தேசிய அரசியலுக்கு அத்தி

வாரம் இட்ட யாழ்ப்பாணம் மாவட்டம் இம்முறை தேர்தலில் மக்கள் அதே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து மூன்று ஆசனங்களை பெற்றுக்கொடுத்தனர். இது யாழ்ப்பாணமாவட்ட மக்கள் தமிழ்தேசிய கட்சிகள் மீதும், குறிப்பாக இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மீதும் கொண்ட வெறுப்பை பேரினவாதக்கட்சி மீது வாக்களித்து அவர்களின் கோபத்தை வெளிக்காட்டினர், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரிய நேத்திரனை தோற்கடிக்க பிரசாரம்  மேற்கொண்ட

  1. எம் ஏ சுமந்திரன்-யாழ்ப்பாணம்.
  2. கே.சயந்தன்-யாழ்ப்பாணம்.
  3. இ.அனோல்ட்-யாழ்ப்பாணம்.
  4. ப.சத்தியலிங்கம்-வவுனியா.
  5. தி.சரவணபவான்-மட்டக்களப்பு.
  6. கி.சேயோன்-மட்டக்களப்பு.
  7. த.கலையரசன்-அம்பாறை.

8.அ.நிதான்ஞ்சன்-அம்பாறை,

ஆகிய எட்டுபேரும் படுதோல்வியடைந்தனர்.

அதில் ஒரேயொரு வேட்பாளர் சாணக் கியன் மட்டும் தெரிவானார்.

ஆனால் தமிழ்பொதுவேட்பாளரை ஆதரித்த

  1. சி.சிறிதரன்-யாழ்ப்பாணம்.
  2. ஞா.ஶ்ரீநேசன்-மட்டக்களப்பு.
  3. கி.கோடீஷ்வரன்-அம்பாறை.
  4. ச.குகதாசன்-திருகோணமலை.

நால்வரும் வெற்றிபெற்றனர். இதன்மூலம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டது சரியான முடிவு என்பது வெளிக் காட்டப்பட்டது. இதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் உள்ள சகல ஆயுதக்குழுக்களையும் மக்கள் முற்றாக துடைத் தெறிந்தனர். மட்டக்களப்பில் பிரதேச வாத அரசியலை முதன்மை படுத்திய பிள்ளையான், யாழ்ப் பாணத்தில் டக்லஷ் தேவானந்தா உட்பட ஏனைய தமிழ்தேசிய அரசியல் விடுதலைப்போராட்ட இயக்கங்களை சேர்ந்த புளட் சித்தாத்தன், ஈபிஆர்எல்எவ் சுரேஷ்பிரமச்சந்திரன், ரெலோ கோவிந்தன் கருணாகரன், முன்னாள் ரெலோ உறுப்பினர்களான ஶ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றவர்களையும் தமிழ்மக்கள் தோற்கடித்தனர், மன்னார் மாவட்டத்தில் மட்டும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சொற்ப வாக்குகளால் தெரிவானார்.

இவ்வாறு கடந்த 2024இல் இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ்தேசிய கட்சிகள் பல பின் னடைவுகளை கண்ட ஆண்டாக அது அமைந்தது.

பொதுவான பிரச்சினைகளான வட கிழக்கில் பலதரப்பட்ட நில அபகரிப்பு, தொல் லியல் பிரச்சினைகள், பௌத்த மயமாக்கல், மேய்ச்சல் தரை விவகாரம், கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் உயர்த்தும் விடயம் அது தொடர்பான நீதிமன்ற வழக்கு என்றவைகள் கடந்த 2024இல் தொடர்ச்சியாக இடம்பெற்றும் அவைகளை தடுப்பதற்கான ஆர்ப்பாட்ட பேரணிகள், போராட்டங்கள் என வடகிழக்கில் எட்டு மாவட்டங்களில் இடம் பெற்றாலும் எதற்குமே தீர்வு இன்றி தட்டிக் கழித்த வரலாறே ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்காவும், தற்போது இரண்டு மாதங்கள் மட்டுமே பதவிகளை தொடரும் புதிய ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்காவும் உள்ளார்.

கடந்தவருடத்துக்கு முந்தியவருடம் 2023இல் புலம்பெயர் அமைப்புக்களுள் ஒன்றான உலகத்தமிழர் பேரவை (Global Tamils Forum -GTF) இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் குழுவினரும் இணைந்து 2023, ஏப்ரல்,27இல் தயாரித்த இமாலயப்பிரகடனம் அப்போது பர பரப்பாக பேசப்பட்டபோது பல தமிழ்தேசிய கட்சிகள், புலம்பெயர் அமைப்புக்களுடைய எதிர்பால் அது கிடப்பில் கிடந்தது. அது கடந்த 2024,பெப்ரவரி மாதம் மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது.

இமயமலைப் பிரகடனத்தின் சிறப்பம் சங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில், 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் இதை முன்எடுக்கின்றனர். முதலாவது கலந்துரையாடல் குருநாகலில் ஆரம்பமாகி கண்டி, மட்டக்களப்பு, மாத்தறை, வவுனியா என பல மாவட்டங்களில் இது தொடர்கிறது. பௌத்த பிக்குகளான மாதம்பகம அசாஜி திஸ்ஸ தேரர், பேராசிரியர் பல்லேகந்தே ரத்னசார தேரர், கித்தலாகம ஹேமசார நாயக்க தேரர்,சியம்பலகஸ்வெவ விமலசார தேரர் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் சார்பில் அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் ஜெயராஜா என்ற தமிழர் கலந்து கொண்டார்.

இதுவும் ஒருவகையான தமிழ்தேசிய அரசியலை தீர்ந்து போகச் செய்யும் செயலாகவே 2025இல் மாறக்கூடும.

கடந்த வருடம் தொடர் போராட்டங்களாக மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேச்சல் தரை மீட்பு போராட்டமும்,கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் போராட்ட மும் கடந்த வருடம் தொடர்சியாக பல மாதங்களாக இடம்பெற்று முடிவுகள் இன்றி கைவிடப்பட்டன.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், இராணுவத்தில் கையளிக்கப்பட்ட உறவினர் கள் பல வருடக்கணக்கில் தொடர்ச்சி யாக முன்னெடுத்தகவன ஈர்ப்பு போராட்டங்கள் கடந்த வருடமும் முடிவின்றி தொடர்ந்தவண்ணம் செல்கிறது. அது எதிர்வரும் 2025இலும் தொடரத் தான் போகின்றது.

ஊழல் ஒழிப்பும், பொருளாதார பிரச்சி னைகளும், அபிவிருத்திகள் மட்டுமே நாட்டில் உள்ளது என்ற மனோநிலையில்தான் புதிய ஜனாதிபதி அநுரவும், அவருடைய தேசியமக்கள் சக்தி அரசும், அமைச்சர்களும் அடிக்கடி கூறி வருகின்றனர்.

கடந்த 75, வருடங்களாக நாட்டில் தீர்க்கப்படாத ஒரு பெரும் பிரச்சினையாக இனப் பிரச்சினை உள்ளது அதனை தீர்க்க வேண்டும் என்ற மனோநிலை அறவே இவர்களிடம் இல்லை இந்த வருடம் கடந்த 2024, டிசம்பர் 15,16,17 மூன்று நாள் இந்தியாவில் இராஜதந்திர பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரா இனப்பிரச்சினை தொடர்பாகவோ, அதிகாரப்பகிர்வு தொடர்பாகவோ வாயே திறக்கவில்லை. ஆனால் அபிவிருத்திக்காக இந்திய அரசு வழங்கிய  கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2371 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளதாகவும் அதனை உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் மாகாண மக்களின் சமூக வலுவூட்டல் என்பன இத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் நோக்கங் களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி கல்விக்காக 315 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்திற்காக 780 மில்லியன் ரூபாவும், விவசாயத்திற்கு 620 மில்லியன் ரூபாவும், மீன்பிடித்துறைக்கு 230 மில்லியன் ரூபாவும் உட்பட 33 திட்டங்களுக்கு 2371 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதை கடந்த 24/12/2024 அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது புதிய ஜனாதிபதி பதவி ஏற்று முதலாவது அபி விருத்தி திட்டமாக இதனை நோக்கலாம் 2025,ம் ஆண்டு நடைமுறைக்கு இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என் கூறப்படுகிறது.

கடந்து செல்லும் 2024இல் ஆண்டு தமிழ்த் தேசிய அரசியலில் பல சிக்கலுடனே செல்கிறது. பிறக்கப்போகும் 2025ல் ஆண்டு  வடகிழக்கில் தமிழ்தேசிய அரசியல் மீண்டெழுமா என்பதை பார்ப்போம். அடுத்த ஆண்டில் இன்னும் இரண்டு தேர்தல்கள் உள்ளூராட்சி தேர்தல், மாகாணசபை தேர்தல் இடம்பெறும் நிலையில் வடகிழக்கு தமிழர்களின் உண்மை நிலைமையை பார்க்கலாம்.