அமெரிக்காவின் செல்வந்தர்களை வீழ்த்திய 2022 ஆம் ஆண்டு

கடந்த வருடம் உலகில் உள்ள பெரும் செல்வந்தவர்கள் ஏறத்தாள 2 றில்லியன் டொலர்களை இழந்துள்ளதுதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் 660 பில்லியன் டொலர்களை இழந்துள்ளனர். அதிக வட்டி விகிதம், பணவீக்கம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையான வீழ்ச்சி கண்டதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரெஸ்லா, ட்விட்டர் ஆகியவற்றின் தலைவர் இலோன் முஸ்க் 115 பில்லியன் டொலர்களை கடந்த வருடம் இழந்துள்ளார். ரெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 70 விகிதம் வீழ்ச்சி கண்டிருந்தன. உலகின் பணக்காரர் என்ற பெருமையையும் அவர் இழந்துள்ளார். கடந்த வருடம் அதிக இழப்புக்களை சந்தித்ததும் அவரே.

அதேசமயம், மேலும் 5 பெரும் செல்வந்தர்களும் தமது பணத்தை இழந்துள்ளனர். அமேசன் நிறுவனத்தின் தலைவர் 80 பில்லியன் டொலர்களையும், முகநூல் நிறுவனத்தின் தலைவர் 78 பில்லியன் டொலர்களையும், கூகுள் நிறுவனத்தின் தலைவர் 40 பில்லியன் டொலர்களையும், எஸ்ரீ லோடர் நிறுவனத்தின் தலைவர் 9.8 பில்லியன் டொலர்களையும் இழந்துள்ளனர்.

உலக செல்வந்தவர்களின் எண்ணிக்கையும் 2,671 இல் இருந்து 2,523 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.