2021ல் மத்திய தரைக் கடலை கடக்க முயன்ற 600 குடியேறிகள் உயிரிழப்பு

இந்த ஆண்டில் மத்திய தரைக்கடலை கடக்க முயன்ற 600க்கும் மேற்பட்ட குடியேறிகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக நார்வே அகதிகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.

“தனது பொறுப்புகளை பிறர் பக்கம் தள்ளாமல் ஐரோப்பிய நாடுகள் முன்வந்து குடியேறிகளையும் அகதிகளையும் பாதுகாக்க மீட்பு நடவடிக்கைகளை அனுமதித்திருந்தால் இவ்வாறான அசாம்பாவிதங்கள் முழுமையாக தவிர்க்கப்பட்டிருக்கும்,” என அகதிகள் கவுன்சிலின் லிபிய நாட்டு இயக்குநர் Dax Roque தெரிவித்திருக்கிறார்.

அது நேரம் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள Madura தீவைச் சேர்ந்த 143 புலம்பெயர் தொழிலாளர்கள் 2020ம் ஆண்டில் பணியாற்றிய நாடுகளில் உயிரிழந்திருக்கின்றனர்.

இதில் அதிகபட்சமாக அத்தீவின் Pamekasan Regency பகுதியைச் சேர்ந்த 52 பேரும், Sampang பகுதியைச் சேர்ந்த 48 பேரும், Bangkalan பகுதியைச் சேர்ந்த 29 பேரும், Sumenep பகுதியைச் சேர்ந்த 14 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக பணியாற்றியவர்கள் என்றும் அல்லது காலாவதியானவிசாவுடன் பணியாற்றியவர்கள் என்றும் கூறப்படுகிறது.